“பகவத் கீதை”யின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குமாறு கேட்டேன். அவர் “பணியில் கருத்தாய் இரு; அது அளிக்கும் பலன்களில் நாட்டம் கொள்ளாதே” என்பதுதான் அதன் மையக் கருத்து என்றார். அதை உடனே புரிந்துகொண்டேன் என்றோ, ஒத்துக்கொண்டேன் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதன் மகிமையையும், பாரத கண்டத்தின் பண்டைய வழிகள் எப்படி மனிதனை நல்வாழ்க்கையின் மூலம் உயர்த்திச் செல்கிறது என்பதையும் நான் அப்போது உணர்ந்திராவிட்டாலும், அந்த கீதையின் கருத்துதான் என்னை மேலும் படித்து அறிந்து கொள்ள உதவியது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
View More குரு வலம் தந்த கிரி வலம்Tag: திருவண்ணாமலை
நம்மைத் தேடி வரும் இறைவன்
நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்….
கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
View More நம்மைத் தேடி வரும் இறைவன்மஹா யோகம்
…உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக,…
View More மஹா யோகம்அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை
அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்… மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?
View More அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வைமகான்கள் வாழ்வில் – 8: ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்
அவர்களின் ஒருவன், மிகவும் ஆத்திரத்துடன், “இப்பொழுது நான் இவரைப் பேச வைக்கிறேன் பார்!” என்று கூறிச் சவால் விட்டான். தன் கையில் இருந்த குறடால் சுவாமிகளின் நாக்கைப் பிடித்து இழுத்தான். இரு தாடைகளையும் குறடால் நசுக்கினான். சுவாமிகள் வேதனையால் துடித்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது…
View More மகான்கள் வாழ்வில் – 8: ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை…
View More மகான்கள் வாழ்வில் – 7: ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்
திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காக்க, தவம் செய்த பெருமைக்குரியவர். இவரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. பிறப்பால் ஆங்கிலேயரானாலும் ஓர் இந்துவாகவே வாழ்ந்தவர்…
View More மகான்கள் வாழ்வில் – 4: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்