இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான்… முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது… சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட..சிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும்…
View More முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்Tag: திருவண்ணாமலை
பார்புகழ் கார்த்திகை தீபம்
கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.
View More பார்புகழ் கார்த்திகை தீபம்பகவானைக் காணவில்லை
…மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை!… நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார். அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது…ரமணர், திருடர்களிடம், “சமையல் அறையில் சாப்பாடு இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று கருணையோடு சொன்னார்…
View More பகவானைக் காணவில்லைஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)
திருவண்ணாமலை மகாதீப விழாவில் வெனிஸ் நகரைச் சேர்ந்த சிவபக்தர்கள் குழுவினர் நெய் காணிக்கை, கிரிவலம்… கேரள-தமிழக மக்கள் இடையே உள்ள பாசப்பிணைப்பையும் நல்லுறவையும் கெடுக்கும் வகையில் கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது… டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். சவுதி அரேபிய பணபலத்துடன் செயல்படும் வஹாபி இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு பிளவுபடுத்துவதாக சமீபத்திய பேட்டி…
View More இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை
அருணகிரிநாதரின் ஜனனம் எப்படி, எப்போது ஏற்பட்டது? தாய் தந்தையர் யாவர்? பரவலாக கூறப் படுவது போல அவர் தன் வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்தனரா? மேலும் பல நம்பிக்கைகள், ஐதீகக் கதைகள்.. இவற்றை எல்லாம் மீள்பார்வை செய்ய தூண்டும் கட்டுரை…
View More அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வைரமணரின் கீதாசாரம் – 12
சிறு வயதில் ரமணர் திருவண்ணாமலையை அடைந்ததுமே தன் கையில் இருந்த சில்லறைக் காசுகளை குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பின் அருணாச்சலக் கோவிலைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார். தொடக்க காலத்தில் ஊரில் உள்ள வீடுகளின் வாயில் முன் நின்று ஏதும் கேட்காது, அவர்களாகவே அளிக்கும் உணவை தன் இரண்டு கைகள் கொள்ளும் அளவு மட்டும் வாங்கி சாப்பிட்டுப் போய் விடுவார். பின் அதுவும் இல்லாது பாதாள லிங்கத்தின் அருகே பல நாட்கள் கண்களை மூடி அமர்ந்திருந்த நேரத்தில் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 12அமைதியின் ஓசை
வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது… அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்… திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை…
View More அமைதியின் ஓசைஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்
ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா?…திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்…ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது….
View More இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்அருணையின் கருணை
ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைஜோதியில் கலந்தோர்
கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவ பெருமான் வீற்று இருக்கும் திசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார்… இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது.
View More ஜோதியில் கலந்தோர்