மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும்குழு, நேராக தார் ரோடின் வழியாகவே ஊர் எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து.. முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்… ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும்…
View More என்னுள்ளில் மார்கழிTag: நினைவுகள்
அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..
நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே…
View More அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்
அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதர், வண்ணார், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது…
View More அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]
அங்கிருந்தவர்களின் உதவியால், எண்ணி நான்கே நிமிடங்களில் அவசர சிகிச்சை வண்டி வந்து, குழந்தையையும் அவன் தாயாரையும் அழைத்துக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அவர்கள் பின்னாலேயே என் மனைவியும், மகனும் கார் ஒன்றில் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் அவர்களிடம், “பயப்படும்படியாக ஒன்றும் நடக்காது…” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய போன், செருப்பு முதலியவைகளை எடுத்துக் கொடுத்து அவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்…. நிகழ்வுகள் நடக்கும்போது நடத்துபவனை நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்பதுதான் என் தாழ்மையான எண்ணம்.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7
உபதலைவர் என்னைக் கூப்பிட்டு நடு இருக்கையில் அமரச் செய்து, நடந்தது என்ன என்று என்னை விவரிக்கச் சொல்லிவிட்டு பாட ஆரம்பிக்கச் சொன்னார்கள். நானும் நடந்த மற்ற சம்பவத்தை விவரித்து விட்டு, அவர்கள் “அருணாசலமே சிவனின் நாமம்” என்ற ஈற்றடியைச் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டு நாமாவளிப் புத்தகத்தைப் பிரித்தேன். சரியாக அப்போது வாசலில் அழைப்பு மணி அடித்தது.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்
தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..
View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . .
ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகாசங்களை…
View More 1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . .