தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…
Tag: பாடல்
மகாகவி பாரதியின் புனித நினைவில்…
அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை…
View More மகாகவி பாரதியின் புனித நினைவில்…சொற்றமிழ் சூடுவார்
பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …
View More சொற்றமிழ் சூடுவார்திருமுறை இசையில் அழகியல் மாற்றம்
சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்…. யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் …
View More திருமுறை இசையில் அழகியல் மாற்றம்முருகன் அலங்காரப் பாடல்:
திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ‘அலங்காரம்’ என்னும் அழகிய மரபுவழிப் பாடலின் வரிகள் மற்றும் அதன் ஒலி வடிவம் – திருமதி ஜயலக்ஷ்மி குரலில்.
View More முருகன் அலங்காரப் பாடல்:முருகா, முருகா பாடல் – வீடியோ
இந்து மகத்துவக் கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.