நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.
View More அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்Tag: பிரம்மம்
அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்
திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.
View More அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு
நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!
View More புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்குசாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்
… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது… விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
View More இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3
(சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூலிலிருந்து): நந்துதல் என்றால் முடிவுறுதல் எனப் பொருள்படுகிறது. எது நந்தாது இருக்கிறதோ அதற்கு முடிவில்லை. சந்திரனுடைய வெளிச்சம் அமாவாசையன்று முடிவுறுகின்றது. சூரியப் பிரகாசம் அத்தகையதன்று. அது ஓயாது பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது… உள்ளிருக்கும் அந்தராத்மா புறத்திலிருக்கும் சூரியன் போன்று யாண்டும் சுயம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மப் பிரகாசத்திற்கு உதயமில்லை, அஸ்தமனமிலை, மறைத்தலில்லை, புதியதாகக் காட்சிக்குக் கொண்டு வருதல் என்பதும் இல்லை. நந்தா விளக்காக சர்வகாலமும் அது ஜொலித்துக் கொண்டிருக்கிறது…தூண்டப் படுவதாலேயே உயிர்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. பொரித்த குஞ்சு, போட்ட குட்டி, பிறந்த சிசு ஆகியவைகள் முதலில் பசியால் தூண்டப் படுகின்றன. உள்ளிருக்கிற பேரறிவுப் பொருளே அத்தூண்டுதலை உண்டுபண்ணுகிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 3காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2
ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.
View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2