வேதப் பாக்கள் வனங்களில் தான் உருப்பெற்றன. ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. நைமிச வனம்,காம்யக வனம், த்வைத வனம், தண்டக வனம், மது வனம், தாருகா வனம் என்று பல பண்டைய வனப் பெயர்கள்.. ஆனைக்கா, கோலக்கா, கோடிக்கா, நெல்லிக்கா, குரக்குக்கா, வெஃகா, தண்கா எனும் அழகான பெயர்கள் வனம் சார்ந்த தலங்களைக் குறிப்பவை… நெருங்கிய வனப்பகுதி நாட்டுக்கு ஓர் அரணாகவே திகழ்ந்தது. தமிழ் மன்னர்கள் பனையையும், வேங்கையையும், ஆரையும் காவல் மரமாகக் கொண்டிருந்தனர்… காடுறை வாழ்க்கை ஆன்மிகத்துக்குத் துணை புரிவதாக நம்பினர்; வானப்ரஸ்தம் எனும் ஒருநிலையும் வரையறுக்கப் பட்டது. ..
View More வனங்களும் நமது பண்பாடும்Tag: புனிதத் தலங்கள்
அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்
பல நூற்றாண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. இதோ இன்று ஆகஸ்டு 5, 2020 அன்று ஸ்ரீராமனின் பேராலயம் அதே அயோத்தியில் எழப் போகிறது… ஸ்ரீராமஜன்மபூமியில் எழும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது. ஆபிரகாமிய அதர்ம மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் தொடர நாம் அனுமதியோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த இந்து சக்தி ஒளிவீசி உரம் பெற்று வேத தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பாரதபூமியைம் அன்னிய சக்திகளின் அழிப்புத் தாக்குதல்களிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பிரகடனம் செய்கிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கியத்துவம். இதனை உள்ளபடி உணர்வோம். இந்த மகத்தான நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்…
View More அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்மகாமகம்: ஓர் அனுபவம்
தண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் போலத் தோற்றமளித்தது… மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது…
View More மகாமகம்: ஓர் அனுபவம்சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2
இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகத்தை 1931ல் சாவர்க்கர் தொடங்கினார். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வரவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக அவர் விதித்திருந்தார்… தீண்டாதார் ஆகிவிட்ட சமூகம் மட்டும் இன்று தாழ்ந்தவர்களாக, “பதிதர்களாக” இல்லை. ஒட்டுமொத்த இந்து சமூகமுமே அன்னிய ஆட்சியின் கீழ் தாழ்ந்து போய் இருக்கிறது. தாழ்வுற்று நிற்கும் இந்த ஹிந்து தேசத்தை மீட்கும் தெய்வத்தை, ஹிந்துக்கள் இழந்து விட்ட அனைத்தையும் அவர்கள் திரும்ப்ப் பெறச் செய்யும் ஒற்றுமை தெய்வத்தை நான் “பதித பாவன” என்று அழைப்பேன்…
View More சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 2சாமி சரணம்
ஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை… மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் – மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்… சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும், பிரபஞ்சமும், தானும் ஆன அழியாத சத்திய ஸ்வரூபத்தையே அழைக்கிறான்…
View More சாமி சரணம்ஒரு காசிப் பயணம்
இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம்…. கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை….இது கோயிலாக, கர்ப்பக் கிரஹமாக இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது…..
View More ஒரு காசிப் பயணம்இமயத்தின் மடியில் – 1
..கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும், இளம் செம்மண் நிறத்தில் சீறிப்பாயும் அலக்நந்தாவும், நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி..மிகச் சிறிய அளவில் மூலவர் மூர்த்தி, பத்ரிநாராயணர். மூன்று அல்லது நாலு அடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கப்பட்டது. பெருமாள் பத்மாஸானத்தில் தியானத்திலிருக்கிறார்.
View More இமயத்தின் மடியில் – 1தரையைத் தொடாமல் வரும் கங்கை
தங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய், வழியிலேயே காவடி தயாரித்து, அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து, தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள்.. இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல்…
View More தரையைத் தொடாமல் வரும் கங்கைஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது… இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்… கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்… இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது..
View More இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்
பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா?
View More சபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்