சல்மான் குர்ஷித், அவர்களே, உங்களுக்கு காசுக்கோ, வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது, அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க?… சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்… என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா?” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே?… திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே குர்ஷித் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த சோனியா பாராட்டி உச்சி முகர்ந்து உடனடி பரிசாக வெளி உறவுத் துறையையும் அளிக்கிறார்….
View More நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!Tag: மோசடி
கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்
அளவை குறைத்துக் காட்டுவது, புறம்போக்கு நிலங்களிலும் குவாரியை விஸ்தரிப்பது, அனுமதி இல்லாமலே பல இடங்களில் குவாரி நடத்துவது என கிரானைட் மோசடியின் இலக்கணங்கள் பல வகை. இது எதையும் உள்ளூர் அதிகாரி முதல் அமைச்சர் வரையிலான படை பரிவாரங்களின் ஆசி இல்லாமல் நடத்தவே முடியாது… நிலக்கரி ஊழலால் நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பு. நாடாளுமன்றம் முடங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை. தேசத்தின் பிரதமரே தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு தள்ளாடுவது நாட்டு மக்களுக்குத் தான் கவலை அளிக்கிறது….
View More கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்
பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்… எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை!…. நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்?… பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?…
View More ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!
அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டு பவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர். இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.
View More ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!ஊழலின் ஊற்றுக்கண் எது?
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலுக்கான பல உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அப்படிப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஊழலை சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். சூடான தோசைக் கல்லை அடுப்பில் இருக்கும்போது தொட்டுவிட்டு கை கொப்புளித்து, ஐயோ ஐயோ என்று அலறுபவனைப் போல ஊழல் பேர்வழிகள் எதிலாவது கைவித்து ஐயோ ஐயோ என்று அலறினால் அன்றி இவர்கள் திருந்த மாட்டார்கள்.
View More ஊழலின் ஊற்றுக்கண் எது?வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?
இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.
View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதைஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்
கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்… மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்….
View More மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்