சீக்கியர்களின் மத உணர்ச்சியும்,ஜாதிய மற்றும் பிரிவினை உணர்ச்சியும் காலிஸ்தானிகளால் தூண்டப்பட்டது..இது முழு விஷமாக மாறுவதற்கு முன்பு நாட்டின் நலன் கருதி தன்னுடைய இமேஜை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடி சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளார். ஆனால் இந்த அரசு தங்களுக்காக கொண்டு வந்த சட்டத்தை வலிமையாக ஆதரித்து,மோடியோடு திரள மறுத்த ஹிந்து விவசாயிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஒரு குறுங்குழு தனது போராட்டத்தால்,லாபியால்,கருத்துருவாக்கத்தால் இந்தியாவின் பெரும்பான்மை ஜனங்களின் அரசின் உள்நோக்கமற்ற நற்செயலை தடுத்து நிறுத்தியிருக்கிறது.இதற்கு என்ன காரணம்? நமக்கு திரளத் தெரியவில்லை,தலைமையை நம்புவதில் சந்தேகமும்,நடுநிலை என்று காயடிப்பு கோழைத்தனமும் வாட்டி வதைக்கிறது நம்மை…
View More வேளாண் சட்டங்கள் ரத்து : ஒரு பார்வைTag: விவசாயிகள் போராட்டம்
நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்
கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…
View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்
விவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா? ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா? கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்… கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும்? ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்?…
View More விவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்கத்தி – திரைப்பார்வை
இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது… ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்… எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது…உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி கூறுகிறேன், “போலி மதச்சார்பின்மை என்பது மிகப்பெரும் சிலந்தி வலை”. அதில் சிக்கிய சிறுபூச்சியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்…
View More கத்தி – திரைப்பார்வைபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1
இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1விவசாயிகளைப் பாதுகாப்போம்
விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் சிக்கல். இதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசித்ததின் விளைவாக இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சு.சண்முகவேல் அடிப்படையில் ஒரு விவசாயி. விளைச்சல் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே கண்டவர். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது….ஐந்து அருமையான செயல்திட்டங்களை இந்நூல் முன்வைக்கிறது. ‘வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல’ என்று நூலை வாழ்த்தியுள்ளார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்…
View More விவசாயிகளைப் பாதுகாப்போம்திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]
எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..
View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]