கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்….. “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்…..

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன் தமிழாக்கம்      : எஸ்.…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

இன்று போய் நாளை வா – எதற்கு?

“என்னைப் பொறுத்த அளவில், நான் விரும்புவது சிறை வைத்துள்ள சீதையை என்னிடம் ஒப்படைத்து, உன் கட்டுப்பாட்டில் உள்ள தேவர்களை அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை முறையில் வைக்க வேண்டிய தகுதியில் வைத்து, உன் தம்பி வீடணனை இலங்கைக்கு அரசனாக்கி நீ அவனுக்குச் சேவகம் செய்து வாழவேண்டும். இவ்விதம் செய்வதால் நீ உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. ”அல்லையாம் எனின்” போரை மேற்கொள்” –என்பது தான் இராமன் இக்கட்டத்தில் இராவணனுக்குக் கூறும் அறிவுரை . இராமன் கூற்றாகக் கம்பன் வடித்துள்ள பாடல்களின் சாரம் இது தான்.

இராவணனிடம், அங்கதனைத் தூது அனுப்பிய போது என்ன சொல்லி அனுப்பினானோ ,அதே செய்தியைத்தான் இப்போதும் இராமன் சொல்கிறான்.அங்கதனிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.

”என்அவற்குஉரைப்பது?என்ன, ”ஏந்திழையாளைவிட்டுத்தன்னுயிர்பெறுதல்நன்றோஅன்றுஎனின்தலைகள்பத்தும்சின்னபின்னங்கள்செய்ய,செருக்களம்சேர்தல்நன்றோ? சொன்னவைஇரண்டின்ஒன்றேதுணிக! “எனச்சொல்லிடுஎன்றான்.

அந்த சந்தர்ப்பத்தில் சொன்ன “ அன்று எனின்” என்பது தான் இப்பொழுது இராவணனிடம் நேர்க்கு நேர் சொன்ன ”அல்லையாம் எனின்” என்பது.

View More இன்று போய் நாளை வா – எதற்கு?

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23

சீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக் கூட்டி அந்தப் பிரச்சினையை அவர்கள் முன் வைத்தான். அகண்ட உறக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு அங்கு உட்காரவைக்கப்பட்டிருக்கும் ராவணனின் இன்னொரு தம்பியான கும்பகர்ணன், அப்போது சபையில் எழுந்து நின்று ராவணன் எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்போது நம்மிடம் நியாயம் கேட்பது எப்படி முறையாக இருக்கும்; தண்டகாரண்ய வனத்திற்குப் போகும் முன்பாகவோ, சீதையை அபகரிக்கும் முன்பாகவோ நம்மிடம் ஆலோசனை செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்று ராவணனை ஒரு பிடி பிடித்தான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23
Hanuman Returns

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

யஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்… தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது… ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்… எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்… தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்… தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்… ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்… இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார்கள்…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்திப்பவனுமே பிறந்த பிறப்பின் பயனை இறப்பதற்கு முன் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அறிந்து கொள்கிறான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு… நமக்கு இன்று கோடிகள் தான் பெரிய எண். ஆனால் எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது… இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17