உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!… எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?…. எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது…. ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்….
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6Tag: கம்யூனிசத் திணிப்பு
கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3
கம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலது சாரிக் காரரையும், அமேரிக்காவின் ஒரு இடது சாரிக் காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள்…. பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள்… அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2
“The Great Leap Forward” என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளவும்,தொழில்களை தொடங்கவும் அனுமதி அளித்தது. இன்று சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இந்த ஒரே ஒரு விஷயமே முக்கியம் என்பது என் தீர்மானமான கருத்து. நாட்டிற்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்பதெல்லாம் மனித இயற்கைக்கு முரணானது. தனக்காகவும், தன் சந்ததிக்காகவும் உழைத்து, சேர்ப்பதில்தான் ஒரு மனிதனுக்கு ஊக்கம் ஏற்படும். அதனாலேயே, நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்பதே சரியான வழியே தவிர,பணக்காரர்களை கொன்று போடுவதால், நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. இன்றைய சீன முன்னேற்றத்தில்,பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளார்கள். அவர்களின் சாமர்த்தியமான வர்த்தகங்களினால்தான் சீன அரசிற்குவரி வருமானம் பெருகியுள்ளது. அதைக் கொண்டே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1
இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்… 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான்… இடதுசாரி பொருளாதார கொள்கையை அனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள்…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1கரங்கள் [சிறுகதை]
“எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது” என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே”… அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது… நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்…
View More கரங்கள் [சிறுகதை]தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5
கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன?
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1
அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும்… இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிர, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல….
View More இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு
கம்போடியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவிய போல் பாட்டின் அட்டகாசத்தை ஒப்பிடும்போது ரஷ்யா, சீனா அல்லது வியட்நாமில் கூட இதுபோன்ற அக்கிரம முறைகளை அவர்கள் கையாளவில்லை என்பது தெரியும்….. கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சிலருடன் மன்னர் சீனா சென்று சீனப் பிரதமர் சூஎன்லாயைச் சந்தித்தார். அவர் அப்போது உடல் நலம் குன்றி இருந்தார். சூஎன்லாய் அப்போது கம்போடிய கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து ஒரேயடியாக கம்யூனிசத்தைத் திணிக்க முயலாதீர்கள் என்று சொன்னார். இவர்கள் பதிலேதும் சொல்லாமல்…
View More கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு