அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்… தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை… ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள்…
View More நமது கல்வித் துறையில் பத்து குறைகள்Tag: கல்விச் சீர்திருத்தம்
தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்
எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது…. இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச – சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு என கல்வியின் அடிப்படைகளாக சிலவற்றை முன்வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் இவர்கள் முன் வைக்கும் சிந்தனைகளுக்கு எதிர் திசையில் ராட்சச வேகத்துடன் நகர்ந்துவருகிறது… எண் சாண் உடம்புக்கு சிரசுதானே பிரதானம். தமிழகக் கல்வி நல்ல நிலையை அடையவேண்டுமென்றால், இந்தச் சொற்பச் சிறுபான்மையினர் தமிழ்க் கல்வியின் சிரசாக வேண்டும்…
View More தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்குரு உத்ஸவ்
நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர்…. ‘குரு’ என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது. உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்…
View More குரு உத்ஸவ்கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
காங்கிரசும் கழகமும் இயற்கையான அணி போலும். […] அதிலும் கபில் சிபல் ஊழலில் ஒரு “கலைஞர்”. [….] கபில் சிபல் பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வை நீக்கி சீர்திருத்தம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார். […] தேர்வு எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களைவிட தேர்வைப் புறந்தள்ளிய மாணவர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள். கலைஞர் உத்தி போல் தெரியவில்லை? என்னே புரட்சி! […] கோடிகளைக் குவிக்கச் செய்யும் மோசடியின் முகப்பூச்சு இந்தப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தம்.
View More கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை… பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால்…
View More தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை
நம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க முடியாது என்றாலும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் கலைவது மிகவும் அவசியம். முக்கியமாக இக்கட்டுரைக்கு விஷயமான உயர்கல்வியில் நம் நிலை மோசமாகவும் இல்லை. இதற்கான உதாரணமாக நமக்குக் காட்டப்படும் IIT, IIM மற்றும் IISc போன்றவற்றின் நம்பகத்தன்மை. அதே நேரத்தில் CII போன்ற அமைப்புகளின்படி இந்தியாவிற்குத் தேவைப்படும் தகுதியுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதைச் சரிசெய்ய நாம் ஒன்று, புதிய தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க வேண்டும்.
View More கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை