மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலரும் முழு போதையில் சுய நினைவின்றி இருந்திருக்கிறார். காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்… திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை…
View More அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்Tag: காவல்துறை
ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்
முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை… வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான்…
View More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்ஜெயேந்திரர் விடுதலை…
சங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதைவிட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை… அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா நினைவிருக்கிறதா? ஜெயேந்திரரிடம் நடந்த அதே ஊடக ஓநாய்த்தனத்துடன் ஊடகங்கள் பாதிரிகளிடம் நடந்தனவா? வாராவாரம் விசாரணை செய்திகள் வதந்திகளாக ஊடகங்களில் காவல்துறையால் கசிந்துவிடப்பட்டனவா? எதுவும் இல்லை….
View More ஜெயேந்திரர் விடுதலை…மக்களைக் காப்பது விளையாட்டல்ல…
அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்…
View More மக்களைக் காப்பது விளையாட்டல்ல…அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்
கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்தில்லி குண்டு வெடிப்பு
யோசிக்க வேண்டிய தருணம் இது. நடந்து விட்ட தில்லி குண்டு வெடிப்பு குறித்து பச்சாதாபம், அயர்ச்சி, விரக்தி, இயலாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு என்ற கலவையான உணர்ச்சிகளை பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்த நேரத்தில் உணருவது இயல்பான ஒன்றுதான். அதோடு தொடரும் இந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
View More தில்லி குண்டு வெடிப்புஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
கேரளம் கேவலமான கதை
[…] சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். […] அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
[….] கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. […] கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்?
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04தஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்!
ஊர் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து, இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதி விரிவாக்கப் பட்டுள்ளது. காவல்துறை ஏழை இந்துக்களின் புகார்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டு, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போய் வருகின்றனர்… பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இந்து இயக்கத் தலைவர்கள் மீது மசூதி வாசலில் அதிரடி தாக்குதல் நிகழ்ந்தது.
View More தஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்!