போரிட்டு மாண்டு வீர சுவர்க்கம் புகுந்த வீரனின் நடுகல்லை உயர்வு நவிற்சியில் ஏற்றி வைத்துப் பாடியது இது. போர் வெற்றியைக் கூறும் வாகைத் திணையின் பேசுபொருளுக்குள் வைத்து இதனைப் பார்க்க வேண்டும். இந்த ஒரு பாட்டை வைத்துக் கொண்டு நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எந்த தெய்வ வழிபாட்டையும் தமிழர் ஏற்கவில்லை என்று கருத்துக் கூறுவதெல்லாம் அதீதம், அபத்தம். இதே புறநானூற்றில் மற்ற பல பாடல்களில் சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்..
View More சங்ககாலத்தில் நடுகல் வழிபாடு மட்டும் தான் இருந்ததா?Tag: சங்க இலக்கியம்
இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்
மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்?… ‘மதுரை’ என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான். கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு, கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு.. அப்பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்…
View More இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்இரு புறநானூற்றுப் பாடல்கள்
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…
View More இரு புறநானூற்றுப் பாடல்கள்தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்
நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….
View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். வள்ளுவர் நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை…
View More அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்புதமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிவேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி
டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜிசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி.. இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார். அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.. ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின் பெரும் கொடைத்திறத்தையும், நல்லுள்ளத்தையும் வாழ்த்திப் பாடுகிறார். அவர் அதியமானை,என்றும் நிலைத்து நிற்கும் சிவபெருமானைப் போல நீயும் நிலைத்து வாழ்வாயாக,என்று வாழ்த்துகிறார்…
View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1
பதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். “கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்கிறது புறநானூறு. “நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே” என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம் தலைநகரான புகாரில் சிவபெருமானுக்குப் பெருங்கோவில்கள் இருந்தமையும் சிவவழிபாடு பெரிதும் பரவியிருந்தமையும் சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. மாமன்னர் சேரன் செங்குட்டுவர் சிவனருளால் பிறந்தவர் என்றும் இளங்கோவடிகள் கூறுகிறார்…
View More சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்
ஓசூரில் ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக, கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது குறித்து ரங்கன்ஜி பேசினார். இறுதியாக, பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார். உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…
View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்