பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…
View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்Tag: முருகன்
இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்
மணலில் மாடம் கட்டி, சங்குச் சிப்பிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, குருக்கத்திப் பூவாலான சின்னப் பொன் சுளகில் தேனெடுத்து உலை வைத்தோம். ஆம்பல்பூத் தீயைக் கவிழ்ந்து படுத்து ஊதி ஊதி முகம் வேர்த்துக் கிடக்கிறோம். முருகா, சின்னவர்கள் கட்டிய சிறிய வீட்டை சிதைத்து விடாதே.. திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் வரும் அழகிய பாடல்கள் இவை. இவற்றில் என்னவொரு நெஞ்சையள்ளும் தமிழ்மணம். அதையும் தாண்டி, இப்பாடல்களில் வரும் மணல்வீடு, சிறுவீடு வெறும் குழந்தை விளையாட்டு மட்டும் தானா என்றும் தத்வார்த்தமாக, ஆன்மீகமாக யோசிக்க இடமிருக்கிறது….
View More இலஞ்சி முருகனும் சிறுமியரின் சிறுவீடும்வாரியாரின் திருப்புகழ் குரு
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அறிவு அவரது திருப்புகழமிர்தம் என்கிற பத்திரிகை மூலமும், பல தொகுதிகளாக இருக்கும் திருப்புகள் விரிவுரை நூல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை திராவிடப்பதர்களும் தெய்வத் தமிழுக்கு செய்த தீமையை அனலில் இட்ட பஞ்சாக அழிக்கும் வலிமை சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரைக்கு உண்டு.இப்படிப்பட்ட மகானின் திருப்புகழ் குரு மதுரை பிரம்மஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஐயர்…
View More வாரியாரின் திருப்புகழ் குருகந்தரலங்காரம்: ஒரு தியானம்
வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…
View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு
எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது… நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்…
View More கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வுகந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு
பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்…
View More கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்புசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை
‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை… வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு… முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது?…
View More சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினைமுருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்
சொற்பொழிவாளர் சுகி சிவம் அண்மையில் தெரிவித்த சில ஆதாரமற்ற, அபத்தமான கருத்துக்களுக்கு அ.நீயின் எதிர்வினை; தொடரும் விவாதம்.. ஸ்கந்தனும் முருகனும் பிரிக்க முடியாத ஒரே பேருண்மையின் வெளிப்பாடு. பாரத பண்பாட்டின் மகத்தான ஞான உச்சம் முருகனின் திருவடிவம். இதில் ஆரிய- திராவிட இனவாதத்தையும் வேத கடவுள் வேறு தமிழ் கடவுள் வேறு என பிரிக்கவும் கற்றுக் கொடுத்தவர்கள் காலனியாதிக்க பிரிட்டிஷார். அதனை தொடர்பவர் இன்று இந்து சமய விரோதிகளான கால்டுவெல் சந்ததியார். ’பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்கிற கச்சியப்ப சிவாச்சாரியார் திருவாக்கின் ஆன்ம அழகின் தூய உண்மையின் ஒரு துளி, எந்த பிறப்பிலாவாது மேல் தெறித்திருந்தாலும் கூட, இப்படி உளறும் அபாக்கியம் ஏற்பட்டிருக்காது… தவத்திரு காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் வைதிகம் வேறு. சுகி.சிவம் பேசும் பிராம்மணியம் வேறு. பின்னது காலனிய கருத்தாக்கம். அதன் படி பிராம்மணிய கடவுள் குறமகளை மணம் செய்ய முடியாது. ஆனால் தவத்திரு சந்திரசேகரேந்திர சுவாமிகளின் வைதீக தெய்வம் குறமகளை மணமுடிக்க முடியும்…
View More முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா? : ஓர் விவாதம்செவ்வேள்: மூன்று தரிசனங்கள்
கவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார்… செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது… போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன். அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன…
View More செவ்வேள்: மூன்று தரிசனங்கள்