தமிழ்நாட்டில் சித்தர் மரபு என்றால் அது புரட்சிகர ஆன்மீகம் என்பது போல ஒரு பிம்பம் உள்ளது. இமயமலை “நவநாத” சித்தர்களின் மகாகுரு கோரக்நாதர் தான் தமிழில் கோரக்கர் ஆகிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் சித்தர் பீடத்தின் தலைவர். ஆனால் அவரைக் குறித்து கீழ்த்தரமான வசைகள், அவதூறுகள், வெறுப்பு இங்கு பரப்பப் படுகிறது. அதைக் குறித்து ஒரு கண்டனம் கூட கிடையாது, மாறாக “சித்தர்” ஆசாமிகளும் கூட இதில் சேர்ந்து கொள்ளும் கொடுமை தான் இங்கு நடக்கிறது…
View More கோரக்கர் வழிவரும் யோகி ஆதித்தியநாத சித்தர்Tag: யோகி
அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது…. மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது… அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன. கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம். எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்…
View More அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்ரமணரின் கீதாசாரம் – 6
ஒருவன் செய்ய வேண்டிய செய்கைகளையும், முறைகளையும் விதிகளாக வகுத்தும், அதேபோல செய்யக் கூடாதவைகளைத் தவிர்ப்பதையும் சொல்வது சாஸ்திரம். செய்யக் கூடியவைகளை தர்ம காரியங்கள் என்றும், தவிர்க்கப்பட வேண்டியவைகளை அதர்ம காரியங்கள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். அவைகள் வேதத்தையே பிரமாணமாகக் கொண்டு பெரும்பாலும் செவி வழியே வந்தவை. காலத்தின் மாற்றங்களினால் எங்கு ஐயங்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் நம் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அல்லது எதைச் செய்தார்களோ அதைப் பின்பற்றி நடப்பதும் சாஸ்திரத்தை ஒட்டி நடப்பதாகவே கொள்ளப்படும்.
View More ரமணரின் கீதாசாரம் – 6போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…
அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
View More யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?
உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?
View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?