குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது…. இந்த நிகழ்வில், நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான்….
View More ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?Tag: லோக்பால் மசோதா
ஊழலின் ஊற்றுக்கண் எது?
இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலுக்கான பல உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அப்படிப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஊழலை சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். சூடான தோசைக் கல்லை அடுப்பில் இருக்கும்போது தொட்டுவிட்டு கை கொப்புளித்து, ஐயோ ஐயோ என்று அலறுபவனைப் போல ஊழல் பேர்வழிகள் எதிலாவது கைவித்து ஐயோ ஐயோ என்று அலறினால் அன்றி இவர்கள் திருந்த மாட்டார்கள்.
View More ஊழலின் ஊற்றுக்கண் எது?ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…
அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….
View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்
மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…
View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!
மக்களை அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாக இருந்த பூலான் தேவி, இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்… மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றங்களிலும் இருப்போர், எந்தவிதக் குற்றங்களைச் செய்தாலும் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது… காங்கிரஸ் கட்சி, தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வின் போதாவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்களா?…
View More புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்!லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்
முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கான காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்குப் பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும்.[…]ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.[…] இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும்.
View More லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்
ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்…. ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன்…எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும்…சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது..
View More அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்