‘எல்லாம் காலம் காலமா இருக்குப்பா. என்ன மதமாற்றம் பண்ணி என்ன செய்யப் போறாங்க.. இந்த இந்துத்துவ பூச்சாண்டி எல்லாம் தேவை இல்லை’ போன்ற மேதாவி வாதங்கள்.. ‘ஈசனும் நானே, சிவலிங்கமும் வெள்ளமும் நானே, எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை. மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அதை அணைத்துக் கொள்கிறாள். எனில், இந்து வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம், திராவிட அரசு இயந்திர வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும்…
View More இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனைTag: வழிபாடு
பழங்காலத்தில் கோவில் வழிபாடு
காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.
கேரளத்தில் வேகமாக பரவும் வஹாபிஸம்
ஜீன் மாதம் 24ந் தேதி ஆங்கில நாளிதழில் கவலைக்குறிய செய்தி ஒன்று வெளியானது. …
View More கேரளத்தில் வேகமாக பரவும் வஹாபிஸம்புதிய பொற்காலத்தை நோக்கி – 20
சலுகைகளுக்காக அரசாங்கச் சான்றிதழ்களில் இந்துவாக வேடம் அணிந்துகொண்டு மறைவாக கிறிஸ்தவ-முஸ்லீமாக இருப்பவர்கள் மிக அதிகம். எதற்காக இந்த இரட்டை வேடம். இன்றைய இந்து அரசு தரும் சலுகைகள் வேண்டும். அதே நேரம் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள் பக்கமும் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு அடிப்படையில் மிகவும் இழிவானது. அபாயகரமானது… சீர்திருத்தக் கருத்துகள் எல்லாம் நவீன காலத்துக்குத் தேவை என்றும் சரி என்றும் கருதுபவர்கள் நவீன கோவில்களைக் கட்டி அவற்றில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால மரபில் மாற்றம் செய்ய விரும்புவதென்பது தேசியக் கொடியின் நிறத்தை மாற்ற முன்வருவதற்குச் சமம்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 20காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்
காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்… எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.. பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது…
View More காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்சிவ மானஸ பூஜா – தமிழில்
முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….
இரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…
நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]
“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”… “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”…
View More நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]நம்பிக்கை – 11: தியானம்
“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….
View More நம்பிக்கை – 11: தியானம்நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்
இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்). “அவ்வளவு தானா?” “ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”…
View More நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்நம்பிக்கை – 9: மௌனம்
“ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்கும் நிலை, அன்பின் மூலமாக மட்டும்தான் பெறக்கூடியதா?” என்று கேட்டார் சங்கர். “உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துதான் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”… “மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்?” என்று கேட்டார் சௌம்யா. “அந்நிலையை அவ்வளவு சுலபமாக அடைய முடியாது. நீங்கள் சிறந்த மகான்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் முக்கியமானவர் ரமண மஹரிஷி. அவருடைய உபதேச முறையே மௌனம் தான். அவருடைய உபதேசமே மௌனம். அவர் மக்களை மௌனமாக இருக்கத் தூண்டினார். அந்த மௌனத்தில் அனைத்தும் புலப்பட்டன. அவ்வாறு புலப்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்”…
View More நம்பிக்கை – 9: மௌனம்