சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9Tag: வியாபாரம்
பெட்ரோல் விலை உயர்வு – 2
இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..
View More பெட்ரோல் விலை உயர்வு – 2பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.
View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!இனி நாம் செய்ய வேண்டுவது…
இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? [..] பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்? [..]
View More இனி நாம் செய்ய வேண்டுவது…மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]
The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்… மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது… அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.
View More மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]கூகுள் கொண்ட கோபம்
அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.
View More கூகுள் கொண்ட கோபம்