குகன் தனது படகோட்டி ஒருவரை அழைக்க, அவன் வருகிறான். கரையோரமாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ள படகில் ராமர் ஏறுவதற்கு எத்தனிக்கையில், “ஐயா ஒரு நிமிஷம்” என்று படகோட்டி கைகூப்பிக் கொண்டு முன்னால் வந்து தடுக்கிறான்… “வானரரே, நல்லவர்களானாலும் பொல்லாதவர்களானாலும் வதைக்குரியவர்களானாலும் கூட, அவர்களிடம் சான்றோர்கள் காட்டும் குணம் கருணையே. குற்றம் செய்யாதவர்கள் இந்த உலகில் யாருண்டு? ” என்கிறாள் சீதை. அனுமன் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று ஆணையிடுகிறாள்..
View More ராமாயணத்தில் சரணாகதிTag: ஸ்ரீராமன்
காலா: திரைப்பார்வை
ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…
View More காலா: திரைப்பார்வைமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்
விஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ ! “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்?… தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்பது இதில் அடங்கும்.. சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து – செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்…
View More மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்அனுமன் எனும் ஆதர்சம்
நாகங்களின் தாயான சுரசை என்பளை விட்டு அனுமரை விழுங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அனுமர், அநாவசியமாக சண்டை போடாமல், புத்தியை மட்டும் பயன்படுத்தி அவள் வாயினுள் நுழைந்து திரும்பி சாகசம் பண்ணித் தப்பிப்பதன் மூலம், தேவையில்லாத நேரத்தில் சக்தியைச் செலவழிக்கக் கூடாது. அடுத்தது சிம்ஹிகை என்ற அரக்கியிடம் சிக்கினார். அனுமர், அங்கே பலத்தைப் பிரயோகித்தார். தேவையான இடத்தில் பலப்பிரயோகம் பண்ணிடணும்… சீதையிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதம், “தங்கள் கணவரால், தாங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கண்டு வரப் பணிக்கப்பட்ட நபர்” என்ற வாசகத்தில் துளியும் மிகையன்றி, துளியும் குறையன்றி சொல்லும் நேர்மையைப் போதிக்கிறார்….
View More அனுமன் எனும் ஆதர்சம்ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2
பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1
க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1சாக்ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?
அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்ஷி மஹராஜ், சாத்வி…
View More சாக்ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10
தாங்கள் சித்திரகூட மலைச்சாரலில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் அங்கு ஒருமுறை வந்துவிட்டதால், அது தெரிந்து அயோத்தி மக்கள் பலரும் அவ்வப்போது அங்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்தால், அது வரும் வழியில் உள்ள பல தபஸ்விகளுக்கும் இடையூறாக இருக்கலாம் என்பதால் இராமர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போகலாம் என்று தீர்மானித்தார். அப்படி அவர்கள் போகும் வழியில் அத்ரி மகரிஷியையும் அவரது பத்தினி அனசுயாவையும் சந்தித்தார்கள். ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்துகொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின் முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10வீரமுண்டு… வெற்றியுண்டு!
இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]
View More வீரமுண்டு… வெற்றியுண்டு!குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி
ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!
View More குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி