நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும்… அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.
View More அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!Tag: ஸ்ரீராமர்
எழுமின் விழிமின் – 33
உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..
View More எழுமின் விழிமின் – 33அவ்வரங்கள் இவ்வரங்கள்
இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.
View More அவ்வரங்கள் இவ்வரங்கள்அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்
தீர்ப்பு தெளிவாக இருந்தது – அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது… இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது. ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது…
View More அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?
ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! …. இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது! மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?
View More ‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன… மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது…
View More அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி