கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

இந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சார ஆசாமியான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்… இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும். இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம், கச்சேரி ரோடு, மயிலாப்பூர். நேரம்: மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில்.

View More கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்… தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்… ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் “விளிம்பு நிலை” மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.

View More கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.

View More தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

View More சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!

View More இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

போகப் போகத் தெரியும் – 42

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்… உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

View More போகப் போகத் தெரியும் – 42

இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

கிபி 2009 இல் மீண்டும் வருகிறார் ஒரு முகமது கஜினியிலிருந்து. அதே சோமநாதபுரம் இருக்கும் குஜராத்துக்கு. படையுடன் அல்ல. பணிவுடன். குஜராத் செழிப்புடன் முன்னேறிக்கொண்டிருக்க கஜினி இன்று கோரயுத்தங்களால் பாழடைந்து கிடக்கிறது. குஜராத் நகராட்சியின் நகர்ப்புற நிர்வாகிகளிடம் கஜினியை மீண்டும் புனர்நிர்மாணிக்க உதவி கேட்கிறார் முகமது இப்ராஹீம்.

View More இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

“வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்… எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது ….

View More வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்