இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு “தி மெஜாரிடி ரிப்போர்ட்” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம் (தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்)…
View More இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்Tag: இந்து உரிமைகள்
DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்
பேஸ்புக்கில் இந்து தர்மத்தின் பெருமைகள், இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி…
View More DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2
கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது… இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை….
View More நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?
நீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், உங்கள் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 க்குள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித்தொகை, இல்லாவிட்டால் இல்லை. ஆனால் இதே நீங்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ (”சிறுபான்மையினர்”) இருந்தால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் சிறுபான்மையினருக்கு ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட 500% அதிகமாக இருந்தாலும் உதவித்தொகை கிடைக்கும்! மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம் இரண்டரை லட்சம் தான் என்று எழுதிக்கொடுத்தால் போதும். கல்விக்கட்டணம் முழுமையும் இலவசம்! இது என்ன விதமான நியாயம் என்று சொல்லுங்கள்…. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து 37 விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. ஆனால் இதில் பெரும்பாலான பயனாளிகள் சிறுபான்மையினத்தை சார்ந்தவருக்கு மட்டுமே… ஒவ்வொரு ஆண்டும் என்ன இலக்கு நிரணயிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். போஸ்ட் 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையினர் என்றால் மாதம் 380 ரூபாய் முதல் 550 வரை வழங்கப்படுகிறது. இதுவே ஏழை இந்துக்குழந்தையாக இருந்தால் ஆண்டுக்கு வெறும் 23 ரூபாய் மட்டுமே… இதை போலவே உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதே இந்துக்களுக்கு ஆண்டுக்கு 12,000 முதல் 40,000 வரை மட்டுமே. மேலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் RTE சட்ட்த்தின் நெருக்குதலும் இல்லாத்தால் அவர்கள் முழுமையாக 100% தங்கள் ஆட்களை படிக்க வைத்து விடுவார்கள். பெரும்பான்மையினரின் கல்வி நிலை என்பது எந்த உதவியும் இன்றி சீரழிந்து போய்விடும்….
View More இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் 2013 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு அளித்த அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய அரவிந்தன் நீலகண்டன், வீர,ராஜமாணிக்கம் மற்றும் சில சமூக அக்கறை கொண்டோர் குழு கிராமத்திற்குச் சென்று இரு சமுதாய மக்களையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தனர். அதன் அடிப்படையிலான கள அறிக்கை இங்கு தரப் படுகிறது…. தேர் நிற்கும் இடத்தை இல்லாமல் ஆக்குவதையும், தேரோடும் வீதிகளில் இந்துக்களின் மத ஊர்வலங்களையும் மணவிழாக்கள் இதர ஊர்வலங்களையும் நிறுத்துவதன் மூலமாக, தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் தம்மை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி, தம் பண்பாட்டு அடையாளங்களையும் சமுதாய ஒற்றுமையையும் குலைக்க நினைப்பதாக இந்துக்கள் கருதுகின்றனர்…. கோயில் தேர்களுடன் ஒரு இஸ்லாமியர் மிக இயல்பாக தம் மிதிவண்டியை இணைத்து வைத்திருந்ததையும் ஒரு பழமையான மதரசா இந்துக்கள் அதிகமாக வாழும் வீதியில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. இத்தகைய சமரச சூழ்நிலையில் மாநில அளவில் வ.களத்தூர் பிரச்சனையை பெரிதாக்குவோம் என முழங்கும் பாப்புலர் ஃப்ரெண்ட் சுவரொட்டிகளையும் காண முடிந்தது. இஸ்லாமியர் பாரம்பரியமாக சமுதாய பொறுமையும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதாகவும் இது முழுக்க முழுக்க பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஊர் ஜமாத்தினைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட நிகழ்வு எனவும் மணிவேல் கூறினார். பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைத்து வருவதாகவும் இளைஞர்களை தவறாக வழி கெடுத்து வருவதாகவும் திரு.ஹுசைன் அவர்கள் தெரிவித்தார்…..
View More வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கைமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்
இந்துக்களின் குழந்தைகள் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி உரிமையை மறுக்கும் மலேசிய அரசுக்கு தமிழ் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.. இதன் தலைவர் வேதமூர்த்தி மகா சிவராத்திரி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அகோர வீரபத்திரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்… உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் தமிழ் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில் உள்ள சுமார் 8 லட்சம் இடங்களில் 5000 இடங்களை மட்டும் இந்துக்களுக்கு ஒதுக்கி இருக்கிறது…
View More மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]
•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…
View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!
1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது… அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்… பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது…
View More அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்
இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய…
View More மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்
நைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை? … ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்… போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்… புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி…
View More ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்