நடிகர் குழு: கமல்ஹாசன், பாஹத் ஃபாஸில், விஜய் சேதுபதி, சூர்யா இசை: அனிருத்…
View More விக்ரம் 2022 – திரைப்பார்வைTag: கமல்
கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1
சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…
View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வைவிஸ்வரூபம் 2: திரைப்பார்வை
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது…பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும்…
View More விஸ்வரூபம் 2: திரைப்பார்வைவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்
ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போது இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள்… இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது… வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துபவர் கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு கமல் மூன்று நாட்கள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் அளித்த பரிசு – ”விநாயகர் என்று ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்”… தமிழக அரசின், காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக ஆவதற்குத் தான் வழிவகை செய்து கொண்டிருக்கிறது….
View More விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்
நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
View More ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்
பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் – இவ்வளவு ஏன்? – அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.
View More உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்