போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம்.
View More ‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சிTag: பாரதியார்
‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்
பாரதியாருக்கு உயிர் தமிழா, ஆரியமா? என்ற கட்டுரை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தபோது திகைப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டுரையைப் பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடக் கழகத்துக்காரர்களுக்கு பாரதியார் தமிழை வெறுத்தார் என்று சொல்ல அருகதை இல்லை. ஏன் இல்லை என்பதை இக்கட்டுரையில் ஆங்காங்கே சொல்கிறேன்.
View More ‘பாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா?‘ ஒரு அலசல்போகப் போகத் தெரியும் – 3
தமிழகத்தில் சமூக, அரசியல் சூழலில் இடஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. கேள்வி கேட்ட வழக்கறிஞர் விஜயனின் எலும்புகளை அம்மாவின் பிள்ளைகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள். நம்முடைய கருத்துப்படி இடஒதுக்கீடு அவசியம்தான். ஆனால் நாம் கேட்கப்போவது வேறுவிதமான கேள்வி. கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகளில் வேலைக்கான இடஒதுக்கீடு இருக்கிறதா?
View More போகப் போகத் தெரியும் – 3பாரதியும் தேசியமும்
மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல…
View More பாரதியும் தேசியமும்ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!
நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் தேசியத் திருநாள்.
“தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.”
View More ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!நவராத்திரி பற்றி பாரதியார்
சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.
சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!
View More நவராத்திரி பற்றி பாரதியார்இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!
தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.
அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.
ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.
View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!அக அழகும், முக அழகும் – 2
போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?
View More அக அழகும், முக அழகும் – 2பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு
[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.
இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை
“பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, “சேர வாரும் ஜெகத்தீரே” என்றும் அழைக்கிறார்.
View More இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை