கருங்கல் தூண்களை எப்போது கிரானைட் போட்டு மறைத்தார்கள், அந்த மகா ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை என்று சொன்னார் கூட வந்த பெரியவர்… அரங்கனைப் பார்த்தவுடன் அதில் மூழ்கி நாம் திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் தத்தளித்து விடுவோம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க இந்தத் தூண் பற்றுதலாம்… ஆறாயிரத்துச் சொச்சம் பக்கங்களில், ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார்.
View More ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1Tag: வரலாறு
ஆசிர்வதியுங்கள் அனந்த் பை
அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்… ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்… அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம்.
View More ஆசிர்வதியுங்கள் அனந்த் பைதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]
பூமணி போல, சோ.தருமன் போல இமையமுமல்லவா, ‘தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை’ என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம்… இரத்தின.கரிகாலனின் கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன… பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை…
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை
கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்… அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?… ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?… பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாக அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்காதபோது, இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை?
View More ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறைBreaking India புத்தக வெளியீட்டு விழா
சென்னை, பிப்ரவரி-3. சுவாமி தயானந்த சரஸ்வதி புத்தகத்தை வெளியிடுகிறார்…அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும் மனித உரிமை அமைப்புகள், கல்வியாளர்கள், சிந்தனை வட்டங்கள், மத அமைப்புகள் ஆகியவை நிழலிருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது…
View More Breaking India புத்தக வெளியீட்டு விழாஇந்து எதிரிகளான எமகிங்கரர்கள்
இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது– முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ… எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. 200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது…
View More இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]
இப்புராணத்தில் பேசப்பெறும் அநேகமான அடியவர்கள், இல்லறத்தினரே என்பதால் பரவலாக எல்லா நிலைகளிலும் பெரியபுராணத்தில் காதல், திருமணம், திருமணவாழ்வு முதலியன பேசப்பட்டிருக்கிறது… மனுநீதிகண்ட சோழனின் வரலாற்றைப் பேசும் போது நீதிமுறைமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொருந்தும் என்று சேக்கிழார் புதுமை காட்டுகிறார்… இவற்றால் தமது காவியத்தை புரட்சிக் காவியமாகவும் சமுதாயக் காவியமாகவும் தெய்வச் சேக்கிழார் மாற்றியிருக்கிறார்.
View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
காமச்சுவை நிறைந்துள்ள சீவக சிந்தாமணி என்ற ஒரு சமணகாவியத்தில் நாட்டரசன் மூழ்கியிருப்பதை விரும்பாத சேக்கிழார், மந்திரிக்கான உரிமையுடனும் நட்புரிமையுடனும் உரிய வேளையில் தட்டிக்கேட்டு திருத்தவேண்டிய நிலைக்கு ஆளானார்…. ஞானசம்பந்தப் பெருமானின் இளமை, துணிந்து நின்று சமணத்தை எதிர்த்து சைவத்தை பாண்டிய நாட்டில் தாபிக்கிறது… பெண் மீது கொண்ட காதலும் அதற்கிடையில் ஏற்பட்ட பேதைமைமிக்க ஊடலையும் நீக்க, அந்தப் பரமனையே தன் மானிடக் காதலியிடம் தூதனுப்புகிறது அந்தச் சுந்தரரின் இளமை…
View More பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]
தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர்… ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்?… ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது… சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
View More தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1