தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்… சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன…
View More எழுமின் விழிமின் – 18Author: ஆசிரியர் குழு
எழுமின் விழிமின் – 17
முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.
View More எழுமின் விழிமின் – 17எழுமின் விழிமின் – 16
பாரதத்தின் ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லீம்களாகி விட்டார்கள். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் ஜனத் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. யாருடைய குற்றம் இது?… நம் தேசிய வாழ்க்கையாகிற உடல் பலவீனப்படும் பொழுது தான் பலவித நோய்க் கிருமிகளான கருத்துகள் நமது மக்களினத்தின் அரசியல் துறையில், சமூகத் துறையில், அறிவுத் துறையில் பெருங்கூட்டமாக நுழைந்து நோயை உண்டாக்குகின்றன… நமது சமயம் சமையலறை மதமாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது… குறைபாடுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது கொள்கைகள் அதிகமான பிரகாசத்துடன் ஜொலிக்கும்…
View More எழுமின் விழிமின் – 16ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்
“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற…
View More ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு
நெல்லைச் சீமை ஈன்றை வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி.
நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்…
வந்தே மாதரம்!
View More 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டுஎழுமின் விழிமின் – 15
பிறரிடமிருந்து நல்லன அனைத்தயும் கற்போம். ஆனால் உங்களது சொந்த இயல்புக்குத் தகுந்தபடி அவற்றைக் கிரகித்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களைப் போல் மாறிவிடாதீர்கள். இந்தப் பாரதீய வாழ்க்கையின் இயல்பு முறையிலிருந்து வெளியே இழுக்கப்படாமலிருங்கள்; பாரதீயர்கள் அனைவரும் வேற்று இனத்தவரைப் போல உண்டு, உடுத்து, நடந்தால், அது பாரத் நாட்டுக்கு நன்மை செய்யுமென்று ஒரு கணமும் நினைக்காதீர்கள்.!…..ஆகவே உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கட்டும். உங்களது முன்னோர்களைப் பற்றி அவமானமடைவதற்கு மாறாகப் பெருமையடையுங்கள்…
View More எழுமின் விழிமின் – 15எழுமின் விழிமின் – 14
நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..
View More எழுமின் விழிமின் – 14எழுமின் விழிமின் – 13
ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…
View More எழுமின் விழிமின் – 13எழுமின் விழிமின் – 12
மக்கள் சத்துவகுணம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு சிறிது சிறிதாக அஞ்ஞானம் என்ற காரிருளில் தமோகுணம் என்ற மாபெரும் கடலில் மூழ்கிப் போவதை நீங்கள் கண்கூடாகக் காணவில்லையா?.. ஒருவன் ராஜஸ குணத்தின் வாயிலாகச் சென்றாலன்றி சாத்துவிக நிலையை அடைவது என்பது சாத்தியமாகுமா?… ஐரோப்பாவிலுள்ல பல நகரங்களையும் நான் சென்று பார்த்ததில் அந்தந்த நாட்டு ஏழை மக்களின் இன்ப நிலையையும், கல்வியறிவையும் கண்டேன். அப்பொழுது என் நாட்டு ஏழை மக்களின் நிலை பற்றியே கண்ணீர் உகுப்பது வழக்கம். ஏன் இந்த வித்தியாசம்? எனக்குத் தோன்றிய விடை “கல்வியே”. கல்வியினால்தான் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை வருகிறது …
View More எழுமின் விழிமின் – 12எழுமின் விழிமின் – 11
அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! ஒளிமிகுந்து விளங்கிய பல நூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது…ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம்…
View More எழுமின் விழிமின் – 11