1949 எனும் ஒரு ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அக்கூட்டங்களில் இந்து சட்ட மசோதா இந்த பண்பாட்டின் மீதும் இந்து பாரம்பரியத்தின் மீதும் செய்யப்பட்ட தாக்குதல் என கூறப்பட்டது என்கிறார் ராமசந்திர குஹா. உண்மை என்ன?… போலி மதச்சார்பின்மை தன்னை அரசியல் சட்ட முகப்பில் நுழைத்து கொண்ட தருணம் இந்தியா இந்திராவின் பாசிச இருளில் இருந்த காலகட்டம். எனவே, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவத்தின் எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு ஆதரவானது; ஜனநாயக எதிர்ப்புசக்திகளான பாசிச -மார்க்ஸிய-வகாபிய அணிகளுக்கு எதிரானது….
View More குஹாவின் பொய்Category: தேசிய பிரச்சினைகள்
நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2
கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது… இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை….
View More நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்
நுளையர், திமிலர், சாலர், உமணர் நெய்தல் மக்கள். சங்க காலத்திலிருந்தே நமக்கான பழங்குடி பெயர் பரதவர் என்பது தெரியுமா உனக்கு? நாம் பாரத தேசத்தின் பரந்து விரிந்த கடற்கரையின் எல்லை காவலர்கள். இந்த இறையாண்மையை நாளும் பேணி காப்பவர்கள். பாரதத்தாய் அவள் எல்லோருக்கு தாய். அவளிடம் அநீதி இல்லை. ஆனால் அவள் பாதம் அமர்ந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களிடம் மட்டும் ஏன் தொடர்ச்சியாய் நம் மேல் இந்த ஓரவஞ்சனை?… நாம் களங்கப்பட்டு நிற்கிறோம் என்கிறார் ஜோ டி குருஸ்… நெய்தலின் பட்டு நிற்கும் களங்கம் பாரத மக்கள் ஒவ்வொருவர் மீதுமான களங்கம். பாரத அன்னையின் மீது அன்னியப்பட்டு நம்மை ஆண்ட பிரிட்டிஷ் இந்திய நேருவிய மேட்டுக்குடிகள் நம்மீது சுமத்தியுள்ள களங்கம்….
View More நெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்
நேருவின் பொருளாதார அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1958 இல் ஆயுள் பாதுகாப்பீடு ஊழலில் பதவி விலக நேர்ந்தது. (இதை பாராளுமன்றத்தில் தன் மருமகன் ஃபெரோஸ்காந்தியே எழுப்பியது தற்செயலா அல்லது நேருவின் ராஜ தந்திரமா என்பது தெரியவில்லை.) நேருவின் உதவியுடன் செயல்பட்ட ஜெயந்தி தர்ம தேஜா பண மோசடி செய்து நாட்டை விட்டே ஓடினார். ஒரு இந்திய குத்ராச்சி என்று வைத்து கொள்ளூங்கள். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழலினாலோ 2-ஜி ஸ்பெக்ட்ரத்தினாலோ எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை என்பது போல நேருவுக்கும் இந்த ஊழலுக்கும் தனிப்பட்ட ஆதாயங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை…. 1962 – இந்திய ராணுவம் மிக மோசமான முறையில் அரசியல் தலையீடுகளால் சீர்குலைக்கப்பட்டு சீனாவினால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நேரு இப்போது ராதாகிருஷ்ணனும் ராஜாஜியுமாக சேர்ந்து தமக்கு எதிராக சதியாலோசனைகள் செய்வதாக அச்சம் கொண்டிருந்தார்…
View More 23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்
”நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை சகிக்கமுடியாததாக உள்ளது. .” என்றார் போதிசத்வ பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் …”கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்.” என்றார் ஜனாப் ஜவஹர்லால் நேரு… நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது….
View More ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்
காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை – பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி – பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்…. எனவேதான் வலிமையான பாரதத்துக்காக தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில் குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ எல்லாத் தமிழருக்கும், முக்கியமானவர் ஆகிறார்….
View More நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?
நீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், உங்கள் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 க்குள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித்தொகை, இல்லாவிட்டால் இல்லை. ஆனால் இதே நீங்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ (”சிறுபான்மையினர்”) இருந்தால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் சிறுபான்மையினருக்கு ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட 500% அதிகமாக இருந்தாலும் உதவித்தொகை கிடைக்கும்! மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம் இரண்டரை லட்சம் தான் என்று எழுதிக்கொடுத்தால் போதும். கல்விக்கட்டணம் முழுமையும் இலவசம்! இது என்ன விதமான நியாயம் என்று சொல்லுங்கள்…. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து 37 விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. ஆனால் இதில் பெரும்பாலான பயனாளிகள் சிறுபான்மையினத்தை சார்ந்தவருக்கு மட்டுமே… ஒவ்வொரு ஆண்டும் என்ன இலக்கு நிரணயிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். போஸ்ட் 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையினர் என்றால் மாதம் 380 ரூபாய் முதல் 550 வரை வழங்கப்படுகிறது. இதுவே ஏழை இந்துக்குழந்தையாக இருந்தால் ஆண்டுக்கு வெறும் 23 ரூபாய் மட்டுமே… இதை போலவே உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதே இந்துக்களுக்கு ஆண்டுக்கு 12,000 முதல் 40,000 வரை மட்டுமே. மேலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் RTE சட்ட்த்தின் நெருக்குதலும் இல்லாத்தால் அவர்கள் முழுமையாக 100% தங்கள் ஆட்களை படிக்க வைத்து விடுவார்கள். பெரும்பான்மையினரின் கல்வி நிலை என்பது எந்த உதவியும் இன்றி சீரழிந்து போய்விடும்….
View More இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…
இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே… ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும்…
View More ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …
கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத்,…
View More உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்
1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு…
View More இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்