“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…
View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்Category: புத்தகம்
வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்
சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…
View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்
அரசியல் விழிப்புணர்வை அதிகரித்து அரசியல் பொறுப்புணர்வுகள் மக்களை நடக்கவைக்கவேண்டும். இந்தப் புத்தகம் அப்படியான விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியிலேயே எழுதப்பட்டுள்ளது.. அண்ணாமலை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் என்ன விதமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதையும் அவரை யாரெல்லாம் புகழ்ந்துரைக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிற முக்கியமான ஆவணமாகவும் இந்த நூல் திகழ்கிறது… இந்தப் புத்தகத்திற்கு அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜே.சாய் தீபக் ஆகிய இரண்டு சிந்தனையாளர்களும் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளனர். புத்தகத்தின் உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசும் அந்த இரண்டு முன்னுரைகளையும் கீழே தருகிறோம்..
View More அண்ணாமலை எனும் திருப்புமுனை – புத்தக அறிமுகம்வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்
இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…
View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்
இந்தப் புத்தகத்தின் மூலம் மஹாபாரதத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்று ஹரி கிருஷ்ணன் கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல்… பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது சிறப்பு.. ஆய்வு முகம், ஆன்மீக முகம் இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது…
View More மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்
ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, நான்கு வேதங்களையும் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் எல்லோருக்கும் பொதுவானது. அவை தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என அவர் விரும்பினார்.. மும்பை, அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ஆரிய சமாஜத்தில் ஆர்வம் பிறந்தது. சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ஜம்புநாதன் மிகவும் மனம் வருந்தி 1924ல் தாராவியில் ஒரு பள்ளியை அவர்களுக்காக ஏற்படுத்தினார்…
View More வேதம் தமிழ் செய்த மேலோன்: ம.ரா.ஜம்புநாதன்ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள இந்த நூல் பல விதங்களில் முக்கியமானது. மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. பிரபத்தி நெறியை “அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார். “வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே”.. ஆசார்யன் என்ற சொல் இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும்…
View More ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்கள் (சுவாசம் பதிப்பகம்)
2022ம் ஆண்டு தொடங்கப் பட்ட சுவாசம் பதிப்பகம் இதுவரை சுமார் 40 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் கீழ்க்கண்ட எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்களும் அடங்கும். தமிழர் பண்பாடு – குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும் (பா.இந்துவன்), மகாபாரதம் மாபெரும் உரையாடல் (ஹரி கிருஷ்ணன்), மறைக்கப்படும் ஈ.வெ.ரா (ம.வெங்கடேசன்), குட்பை லெனின்: கம்யூனிச திரைப்படங்கள் (அருண் பிரபு) உள்ளிட்ட நூல்களை இங்கு அறிமுகப் படுத்துகிறோம்..
View More எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்கள் (சுவாசம் பதிப்பகம்)கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…
View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு
முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது…
View More கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு