எந்த அளவுக்கு நம் ஊடகங்கள், இயக்கவாதிகள், வெளிநாட்டு சக்திகள், போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் ஒருவரோடொருவர் பின்னி பிணைந்து இந்துக்களுக்கும் இந்திய தேச நலனுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம் சஞ்சீவ் பட். மோடி எத்தகைய சூழலில் செயல்பட்டு வருகிறார் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியம் ஏற்படுகிறது. … இவருக்கு எதிராக தேசநலனை குறித்து கவலைப்படாத நம் விலை போன ஊடகங்கள், சுயநல அரசியல்வியாதிகள், மதவெறி பிடித்த அன்னிய சக்திகள் அவற்றின் உள்ளூர் தரகர்கள்… இவர்கள் வகுக்கும் வியூகங்கள்…
View More கலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து
அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் …
View More அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்துநன்றி! சன் டிவி வீரபாண்டியன்…
ஆக வீரபாண்டியனின் மன பிறழ்ச்சி வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் – மரியாதையான தோற்றங்களில்.
View More நன்றி! சன் டிவி வீரபாண்டியன்…அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?
ஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத்…
View More அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2
கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்…. தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார்… இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1
இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….
View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்
ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) அமைப்பின் தன்னார்வலர் தில்லிக் காரர் கௌரவ் ஷர்மா இந்தக் கேள்விகளை எழுப்புகிறார் – நீங்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பவரா? இல்லை என்றால், எப்படி உச்சநீதி மன்றத்தில் பயங்கரவாதிகளின் வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருப்பவரை நிறுவனராகக் கொண்ட கட்சியை ஆதரிக்கிறீர்கள்?… வகுப்புவாதத்தையும் வாக்கு வங்கி அரசியலையும் நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உ.பி பரெய்லி மதக்கலவரங்களில் நேரடியாக ஈடுபட்ட, பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய ஃபத்வா வெளியிட்ட மௌலானா தவ்கீர் ரஜா என்பவரிடம் பிச்சை கேட்காத குறையாக்க் கெஞ்சினார் அர்விந்த் கேஜ்ரிவால். அவரை எப்படி ஆதரிக்கிறீர்கள்?…
View More ஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்
போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியும், சட்டம்பி சுவாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்…. போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார்….
View More மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்ஜெயேந்திரர் விடுதலை…
சங்கரராமனை உண்மையில் கொலை செய்தது யார் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. காவல்துறை இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை சிக்க வைக்க வேண்டும் சங்கர மடத்துக்கு எத்தனை அவப்பெயரை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஒற்றை நோக்கத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்பதைவிட சங்கர மடத்துக்கும் சங்கராச்சாரியாருக்கும் முடிந்த அளவு கெட்ட பெயரை பெற்றுத் தர வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டது காவல்துறை… அதே சமயம் தொடர்ந்து கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓமலூர் சுகன்யா நினைவிருக்கிறதா? ஜெயேந்திரரிடம் நடந்த அதே ஊடக ஓநாய்த்தனத்துடன் ஊடகங்கள் பாதிரிகளிடம் நடந்தனவா? வாராவாரம் விசாரணை செய்திகள் வதந்திகளாக ஊடகங்களில் காவல்துறையால் கசிந்துவிடப்பட்டனவா? எதுவும் இல்லை….
View More ஜெயேந்திரர் விடுதலை…நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1
இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்….
View More நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1