இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு… நமக்கு இன்று கோடிகள் தான் பெரிய எண். ஆனால் எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது… இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

கோப முகத்துடனும், தூசியைக் கிளப்பும் வண்ணம் கால்களை உதைத்துக் கொண்டும் லக்ஷ்மணன் கிஷ்கிந்தா நோக்கி நடந்த நடையிலிருந்தே ஏதோ வேண்டாதது நடக்கலாம் என்று யூகித்த வானரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டனர். குடித்துக்கொண்டும், அரசவையில் பேசிச் சிரித்துக்கொண்டும் அரண்மனையில் சிங்காதனத்தில் வீற்றிருந்த சுக்ரீவனுக்கு, லக்ஷ்மணன் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டதாக இளவரசன் அங்கதன் தெரிவித்தான். இதற்குள் விவரங்களைத் தெரிந்துகொண்ட அமைச்சர் அனுமானும் சுக்ரீவனை அமைதியாக இருக்குமாறும், லக்ஷ்மணன் கோபத்தைத் தூண்டிவிடாதவாறு பேசுமாறும், அவன் கோபத்திற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்குமாதலால் மன்னிக்க வேண்டிக்கேட்கவும் சொல்கிறான். மழைக்காலம் முடிந்தும் முன்பு அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீதையைத் தேடும் வேலையை ஆரம்பிக்காது சுக்ரீவன் மந்த கதியில் இருப்பதாகவும் அனுமன் சொன்னான். கோட்டை வாயிலில் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, பொறுமை இழந்த லக்ஷ்மணன் கோபத்தில் வில்லை எடுத்து அதன் நாண்களை முறுக்கி ஓசையைக் கிளப்பினான். அந்த சத்தத்தைக் கேட்ட சுக்ரீவனுக்கு வந்திருப்பவரின் நிலைமை புரிந்துவிட்டது.

View More இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16

இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15

பணக்காரனோ ஏழையோ, துன்பத்துடனோ இன்பத்துடனோ, குறையுடனோ குறையில்லாமலோ உள்ள நண்பன்தான் ஒருவனுக்குக் கடைசி புகலிடம்…. தர்ம நியதிப்படி தன் தம்பி, தன் மகன், நற்குணங்கள் கொண்ட தன் மாணவன் இம்மூவரும் சொந்த மகன்கள் போலவே நடத்தப்பட வேண்டும்….வாலி தனது தம்பியை தன் மகன் போல் கருதி அதற்குண்டான உரிமையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்ததாலும், அவனது மனைவியை அபகரித்துக்கொண்ட பாவத்திற்காகவும் அவனுக்கு ராஜநீதிப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது…

View More இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14

..அரசன் ஒருவனுக்கு எதை வேண்டுமானாலும் அழிக்கவும், மாற்றவும் சர்வ உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் அவன் தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டிக்கவேண்டும்; அதுவும் தவறுக்கு ஏற்றபடி கூடுதலோ குறைவோ இல்லாது தண்டனை அமையவேண்டும். அவனிடம் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நியாயம் அல்ல. அரசன் மட்டுமல்ல, இந்த நீதி சமூகத்தில் எந்த விதமான உரிமைகளும் இல்லாதவர்களுக்கும் உள்ளதுதான். பிராமணர்கள் தினப்படி செய்யவேண்டிய சந்தியா வந்தனத்திலும், “சூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதஸ்ச மன்யுக்ருதேப்யஹ பாபேப்யோ ரக்ஷந்தாம்” என்று கோபத்தினால் வரும் பாவச் செயல்களைச் செய்யாமல் தவிர்க்கக் கடவுளை வேண்டுவதாக வருகிறது. ..

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14

ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

அடியே, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்கு உரியவன் ஆவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்கு உரியவனாகிறான்… வீணை இசைக்கப் படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை வீணையின் நாதத்தில் இணைந்துள்ளன. வீணையைப் பல்வேறு விதமாக இசைக்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே… வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி)….

View More ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13

..இராமர் தான் சொன்னதைச் செய்யும் உண்மையான மனிதர்; வெகு உயர்ந்த குணங்களைக் கொண்ட அவர் உடலாலும் உள்ளத்தாலும் மிகத் தூய மனிதர். கண்கள் அகலமாகவும் அழகாகவும், மற்றும் கைகைள் நீண்டதாயும் இருக்கும் அவர், அனைவரிடமும் உண்மையான அக்கறை கொண்ட நல்ல மனிதர். தனது என்று எதையும் நினைக்காமல், யார் எதைக் கேட்டாலும் அதைத் தயங்காது கொடுக்கும் வள்ளலாகிய அவர், பிறருடையது எதையும் விரும்பவும் மாட்டார்; அவர்களாகவே எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளவும் மாட்டார். அவர் என்றும் எப்போதும் உண்மையே பேசுபவர்; விளையாட்டுக்குக்கூட பொய் பேசமாட்டார்…

View More இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு – 13

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11

பரதன் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன், அவன் தாயாயிருந்தும் கைகேயி எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள், சாதாரணமாக தாயைப்போல பிள்ளை என்பார்கள், ஆனால் பரதனோ வேறுமாதிரி இருக்கிறானே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். கைகேயியைப் பற்றிக் குறைவாகப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராமர் அதை ரசிக்கவில்லை. உடனே அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10

தாங்கள் சித்திரகூட மலைச்சாரலில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து அனைவரும் அங்கு ஒருமுறை வந்துவிட்டதால், அது தெரிந்து அயோத்தி மக்கள் பலரும் அவ்வப்போது அங்கு ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்தால், அது வரும் வழியில் உள்ள பல தபஸ்விகளுக்கும் இடையூறாக இருக்கலாம் என்பதால் இராமர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் போகலாம் என்று தீர்மானித்தார். அப்படி அவர்கள் போகும் வழியில் அத்ரி மகரிஷியையும் அவரது பத்தினி அனசுயாவையும் சந்தித்தார்கள். ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்துகொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின் முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9

..ஆனால் இராமரோ நியாயமான, நிரந்தரமாய் எப்போதும் உள்ள உண்மை நிலை ஒன்றையே ஆதாரமாய்க் கொண்ட வழிகளில் உறுதியாய் நிற்பவர். அவரைப் பொறுத்தவரை உண்மை ஒன்றே இறைவனாகும்; ஏனென்றால் இறைவன் ஒன்றே உண்மையுமாகும். அந்த தர்மத்தின் வழி என்பதே உள்ளத்தில் உள்ள உண்மையின் வெளிப்பாடு ஆகும். அதைச் செய்வதே ஒருவனது கடமையும் ஆகும். எவனொருவன் உண்மை வழி நடக்கவில்லையோ அவன் தனது கடமையையும் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். ஆக உண்மையாய் இருந்து தன் கடமையைச் செய்வதே வாழும் வழிகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வழி…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9