சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான்… ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.
View More போகப் போகத் தெரியும் – 23Category: வரலாறு
மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை
ஹார்வார்ட் ஸம்ஸ்க்ருத பேராசிரியர் மைக்கேல் விட்சல் சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விகளை தொடுத்திருந்தது நினைவிருக்கும். அவரது வருகையை ஒட்டி நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது ……
View More மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வைஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
… எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது;ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம்.
View More ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்போகப் போகத் தெரியும் – 22
“சிறிதுகாலம் பாரதிதாசன் சிறைப்பட்டதாக ஒரு தகவல். அதுகூடப் பொதுக்காரணத்திற்காக அல்ல, தனிப்பட்ட சொந்தக் காரணத்திற்காக. ஏதோ ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்மக்கள் இவரை நையப்புடைத்ததாகவும் அவரை நன்கறிந்தோர் கருத்து கூறுகின்றனர். அந்தக் காலத்தில் அச்சடித்து விநியோகிகப்பட்ட சிற்றறிக்கை ஒன்றும் இதை உறுதி செய்கிறது.”
View More போகப் போகத் தெரியும் – 22சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்
மைக்கேல் விட்செல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் இன்று மாலை சென்னையில் பேசுகிறார். எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.
View More சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்
அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது… திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.
View More நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்
கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை… மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
View More காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்ஓடிப் போனானா பாரதி? – 10
‘இந்தியா’ பத்திரிகையின் – சர்ச்சைக்குரியதாக வண்ணம் தீட்டப்படும் – அந்தக் குறிப்பிட்ட தலையங்கத்துக்குத் திரும்புவோம். இந்தத் தலையங்கத்தின் சில துண்டுகளை மட்டும் ஆய்ந்த ஆய்வாளர்கள், எழுதியவனின் இதயம் வெளிப்படும் முக்கியமான பகுதிகளைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஆய்வுகளில் மேற்கோள் காட்டும்போது ஒரு சில பகுதிகளைத்தான் காட்டமுடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும், தான் காட்டும் மேற்கோளின் தன்மை, அந்தப் பகுதியைத் தனியாகப் படித்தால் உண்டாகக் கூடிய – மையப்புள்ளியின்று விலகக் கூடிய – கருத்து உருவாக்கம் போன்றவற்றை மனத்தில் கொள்ளாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டனவோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
View More ஓடிப் போனானா பாரதி? – 10ஓடிப் போனானா பாரதி? – 09
எனவே, பாரதி சீனிவாசனை ‘சிக்க வைத்துவிட்டான்’ என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை’ என்னும் வாதம் வெறும் அபவாதமாக நிற்கிறது. சீனிவாசன், பாரதியை நம்பியோ, சார்ந்தோ இருக்கவில்லை. நம்பியிருத்தல் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? ஒரு ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாக இருக்க முடியும்; ஒரு கஷ்டம் நேர்ந்தால், பொருளாதார ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துணை நிற்பார் என்று நினைப்பது நம்பிக்கையாக இருக்க முடியும். இன்னும் இது போன்ற சில விஷயங்களில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ‘நம்பி இருக்கலாம்.’
View More ஓடிப் போனானா பாரதி? – 09ஓடிப் போனானா பாரதி? – 08
முனைவர் இறையரசன் மேற்கோள் காட்டியுள்ள ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பிட்ட ‘இந்தியா’ பத்திரிகையின் தலையங்கத்தின் இரண்டு பகுதிகளும் அப்படித்தான் ஆகியிருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் – தலையங்கத்தின் மூன்றாவது பத்தியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தின் ஒரே ஒரு பகுதியும், கடைசிப் பத்தி முழுமையும் – உருவாக்கும் எண்ணம் என்வென்றால், ‘சீனிவாசன் ஒரு தேசபக்த விரோதி. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததன் மூலம் தேச பக்திக்கு விரோதமான ஒரு செயலைச் செய்துவிட்டார். நாம் அப்படிச் செய்யக் கூடாது. (அல்லது, ‘அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டோம்.’)…
View More ஓடிப் போனானா பாரதி? – 08