முருகனின் பல்வேறு தோற்றங்கள்

முருகன் என்றால் இளமையானவர், மணம் மிக்கவர், தெய்வீக அழகுடையவர் என்று பொருள். குமரன் என்றாலும் இளமையானவர் என்றே பொருள். அழகு என்பது இதயத்தை சுத்தப்படுத்துகிறது. இளமை என்பது நோய் நொடிகள் அற்ற தன்மையைக் கொடுக்க, மணம் என்பது சுத்தமான சூழ்நிலையில் இருக்க வைக்க, தெய்வீக அருள் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடன் இருக்க வைக்கின்றது. அழகையும், இளமையையும் குறிக்கும் விதத்தில் அவரை முருகன், அழகன், குமரன் போன்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்…. முருகனை அந்த ஆறு கிருத்திகை செவிலித் தாயார்களும் எடுத்து வளர்த்ததினால்தான் அவர் கார்த்திகேயர் என்ற பெயரையும் அடைந்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வரும் கிருத்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதமாகும்….

View More முருகனின் பல்வேறு தோற்றங்கள்

அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

கந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது? பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்…

View More அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன…. உணர்பவன் பொருளை உணரவில்லை என்றால், உருவங்களும் நாதங்களும் எதற்கும் பயனில்லாது போகின்றன. இவ்வாறு உணர்பவனின் பிரம்ம நிலையில் அனைத்துமே அதன் தன்மைகளான சத்-சித்-ஆனந்த சொரூபங்களாகவே விளங்குகின்றன. அந்த நிலையில் காண்பவன்- காணப்படுவது- காட்சி என்று எதனையும் பிரித்து அறிய முடியாது எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும். காணும் தனது சொரூபமே காட்சியாகி நிற்பதை உணர்வதே அறிய வேண்டியவற்றுள் எல்லாம் உயர்வான பேரறிவாகும்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20

ஒரு நல்ல இளமையுடன் இருக்கும் பலசாலி மற்றும் அறிவாளி ஏகச் சக்கிராதிபதியாக இருக்கும்போது அனுபவிக்கும் ஆனந்தமே மனிதனின் ஆனந்தம் என்று வரையறுக்கப்படுகிறது. அதாவது மற்ற மனிதர்களின் ஆனந்தம் எதுவுமே ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அந்த மனிதனில் தொடங்கி பிரம்மா வரை சொல்லப்பட்டு, அந்த பிரம்மா அனுபவிப்பதே ஆத்மானந்தத்தின் ஒரு துளி என்றும், மற்றவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆனந்தம் கிடைத்தும், அவர்கள் எல்லோருமே உயர்வாய் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது….. நாமம், ரூபம் மட்டுமே உள்ளதால் இவ்வுலகப் பொருட்கள், செய்கைகள் எல்லாமே மாயை என்றாகின்றன. அவைகளும் அந்தப் பிரம்மத்தின் சந்நிதானத்தில்தான் இருக்கின்றன, நடக்கின்றன. அதைத்தான் நமது அவ்வப்போதைய ஆனந்த நிலை காட்டுகிறது. அப்படி எல்லாமே பிணைந்து இருப்பதை நாம் எளிதாகக் காண இயலாது. எப்படி பாலில் இருக்கும் நெய்யைக் காண முதலில் பாலைத் தயிராக்கி, அதில் நீர் கலந்து மோராக்கி, அதைக் கடைந்து, வெண்ணையைத் திரட்டி, பின்பு அதை உருக்கி நெய்யை அடைகிறோமோ, அதேபோல தொடரும் நம் ஆன்ம விசாரம் எனும் பெருமுயற்சியால் பிரம்மம் எதிலும் இருப்பதை உணரலாம்…..

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19

மனிதர்களில் பலருக்குமே ஒன்று கிடைத்து விட்டதால் வரும் மகிழ்ச்சியை, அது கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே கூட தந்துவிடும். அதாவது தூலத்தை விட அதன் தொடர்பான நுண்ணிய அறிவே நாம் வலைபோட்டுத் தேடும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றுதான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்…. உலகம் தெரியாத நமது ஆழ்ந்த உறக்கத்திலும் அந்தப் பிரம்மமாக நாம் இருக்கிறோம். ஆனால் நமது அவித்தையாகிய அஞ்ஞானத்தால் நாம் அதை உணர்வதில்லை. அப்படி நாம் உணரா விட்டாலும் அதன் தன்மைகளால் அது தான் இருப்பதையும், அறிவாகவும் ஆனந்தமாகவும் உள்ளதை நம்மை “ஆனந்தமாகத் தூங்கினோம்” என்று அப்போது உணர்ந்ததைப் பின்பும் சொல்லவைக்கிறது…. எந்தப் பொருளை குறுக்காகவோ, மேலோ, கீழோ எப்படிப் பார்த்தாலும் எங்கும் நிறைந்திருக்கிறதோ, எது சத்சிதானந்த சொரூபமாயும், இரண்டற்றதாகவும், எது முடிவில்லாததாயும், அழிவற்று எப்போதும் உள்ளதாயும், எது தானே ஒன்றாய் இருந்து விளங்குமோ, அந்தப் பொருளையே பிரம்மம் என்று உணர்வாய்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19

சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்

சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்… வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில் வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர்…. ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம். சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார்….பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை….

View More சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்

கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்… கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்து… போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்… பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்…

View More கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18

மோகம் எனும் கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக அழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்… நீரில் நீரும், தூய்மையான ஆகாயத்தில் ஆகாயமும், தீயில் தீயும் கலப்பது போல, தூலமாகிய உடல் நீங்கும்போது, மீதமுள்ள நுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியற்ற, எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்…. ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைத்து விட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்றா சொல்வது?…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18

தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே
நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே….

ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்…

அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல்ஒன் றின்றியே தந்தெமைக் காத்து, மேல்
செல்வராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான்….

View More தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17

இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்… வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்… சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17