ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

பல்லாயிரம் ஆண்டுகள் முன் படைக்கப்பட்ட இந்தக் காவ்யத்தில் இடைச்செருகல்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்பது புரிந்துகொள்ள முடிந்த விஷயம் தான். ஆனால் ராமாயண காவ்யத்தில் நுழைக்கப்பட்ட இடைச்செருகல்கள் மிகுந்த ப்ரபாவம் மிக்கவையா? இவை வால்மீகி முனிவர் படைத்த மூல காவ்யத்தை உருத்தெரியாமல் சிதைத்துள்ளனவா? நம்மிடையே இன்று புழக்கத்தில் உள்ள வால்மீகி ராமாயணம் என்ற நூல் இடைச்செருகல்களால் ப்ரபாவிக்கப்பட்டு வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம் என்ற மூலநூலுடன் முற்றிலும் வேறுபட்டு கிட்டத்தட்ட ஒரு பொய்க்கதையாக நம்மிடையே உலா வருகிறதா?

View More ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்…. குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை…

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி

மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்… இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்…

View More கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி

அவதூறுகளை எதிர்கொள்வது-2

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீதான இந்த அவதூறு ‘ஆராய்ச்சி’ நூல் வெளிவந்த போது இந்திய பாராளுமன்றத்தில் அதை தடை செய்வது குறித்த பேச்சு கூட எழுந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. உட்துறை அமைச்சராக விளங்கிய லால் கிருஷ்ண அத்வானி இந்த நூலை தடை செய்ய முடியாது என கூறிவிட்டார். ஆக, இந்து ’வலதுசாரிகள்’ என முற்போக்குகளால் கரித்து கொட்டப்படுவோர் கூட ஹிந்து ஞான மரபின் ஒரு மகத்தான ஞானிக்கு எதிராக செய்யப்பட்ட அவதூறை ஜனநாயக ரீதியில் சந்திக்கவே முடிவு செய்தனர்….. ஒரு நவீன ஹிந்து அமைப்பு தனக்கு எதிராக மிக மோசமாக மிக விரிவாக மிக பெரிய நிறுவன பலத்துடன் சுமத்தப்படும் அவதூறுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்கான சரியான ஆதர்ச எதிர்வினையாக அது அமைந்தது.

View More அவதூறுகளை எதிர்கொள்வது-2

அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….

View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

பேயம்மை

தமிழில் பேய் என்ற சொல் முற்றிலும் தீய பொருளைக் கொண்டிருக்கவில்லை. பேய் என்பது உடல் கடந்த ஒரு நிலை.. தொங்கிய முலைகளும், குழி வயிறும், சிவந்த சடை மயிரும் கொண்ட பெண் பேய் இங்கு ஓர் பித்து நிலையின் குறியீடாக வருகிறது. உலகின் முட்டாள் தனங்களை எல்லாம் பார்த்து சிரித்து, உன்மத்தம் கொண்டு ஆடும் பித்து… அவள் உலகெங்கும் கல்வியின் ஒளியை எடுத்துச் செல்வாள். பார்த்தன் வில்லேந்தி அக்கிரமக் காரர்களை ஒழித்தது போல, அநீதியைக் கண்டு சீறி அநியாயம் செய்பவர்களை ஒழிப்பாள். ஆம், சத்தியத்தின் மீது, நீதியின் மீது, கல்வியின் மீது, போர்க் குணத்தின் மீது வெறி கொண்டவள். அந்தத் தாயின் சன்னதம்…

View More பேயம்மை

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22

கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா மாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்… (அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக்கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22

சாமி சரணம்

ஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை… மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் – மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்… சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும், பிரபஞ்சமும், தானும் ஆன அழியாத சத்திய ஸ்வரூபத்தையே அழைக்கிறான்…

View More சாமி சரணம்

மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்

போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியும், சட்டம்பி சுவாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது  பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்…. போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார்….

View More மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்

போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.

View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை