வேல் உண்டு, பயமேன்?

யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது…. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர்.

View More வேல் உண்டு, பயமேன்?

[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

இதனை நாம் எவரிடமிருந்தும் கடன் பெறவில்லை, பெறவேண்டிய அவசியமும்
இல்லை.இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கட்டப்பட்ட குருகுலம்
இது. தவிர உழைப்பின் மாண்பினை(Dignity of Labour) இந்திய மக்களுக்க உணர்த்திய
வகையில் இப்பெருமை காந்திடிகளுக்கு உண்டு. காந்தியடிகள் இதை
நடைமுறைப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரமஹம்ஸர் இச்செயலைச்
செய்து காட்டியிருக்கிறார். குலத்தால் அந்தணராகிய ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்
உண்மையான தொண்டு என்ன என்பதைத் தம் வாழ்வின் மூலமாக உணர்த்தியருளினார்

View More [பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

பலவேசமுத்துவும் தன்னாசியும்

“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது… விகிர்தர் என்னும் சொல்லுக்கு பலவிதமான உருவங்களை எடுப்பவர் என்று அர்த்தம்… இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் எனப் பெயர் சூட்டி அவமானப்படுத்தும் ஆட்களிடம் இருந்து காக்கவேண்டும் எனத் தோன்றுவதில்லை… ‘அண்ணன்மார் கதை’யைத்தான் திரித்து பாத்திரங்களின் தெய்வத்தன்மையை மறுத்து கருணாநிதி ஒரு புத்தகம் எழுதியதும் அதைக்கொண்டு படம் எடுத்ததும்…

View More பலவேசமுத்துவும் தன்னாசியும்

குழவி மருங்கினும் கிழவதாகும் – 4

குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்… தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்…. அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி! கொட்டுக சப்பாணி….கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?….

View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 4

என்னை ஏன் மணந்துகொண்டாய்

பஞ்சப் பனாதைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்மூடித்தனமாக “என்னை மணம்புரிந்துகொள்கிற அளவுக்குத் துணிந்து விட்டாயா? இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. நீ ஊம் என்று ஒரு வார்த்தை சொல். நாளைக்கே சிசுபாலனை வரவழைக்கிறேன்…”… “இதை நீங்கள் தப்பு என்று சொன்னால், கோவிந்தனைக் கணவராக வரிக்கும் வாய்ப்பைத் தரவல்ல இந்தத் தப்பை நீயும் செய் என்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லுவேன்”…

View More என்னை ஏன் மணந்துகொண்டாய்

பக்தியும் செல்வமும்

“நான் உங்கள் வீட்டில் உணவருந்த வேண்டுமானால் ஒரு நிபந்தனை. நானாக உங்கள் வீட்டை விட்டுப் போகிற வரையில் என்னை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியேபோகச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. சம்மதமா?”… “என்ன சாமியாரே, எப்போது புறப்படுவதாக உத்தேசம்?”

View More பக்தியும் செல்வமும்

வெண்ணைப் பானை

எந்தப் பரமாத்மா இந்த உலகம் முழுவதையும் கட்டி வைத்திருக்கிறாரோ, அவரைக் கட்டி வைத்து விடலாம் என்று யசோதாம்மா நினைத்து விட்டார்கள். அவருடைய ஒப்புதல்லில்லாமல் அவரை யாராவது கட்ட முடியுமா? யார் தன்னுடைய மனதில் ‘த்வதீய’ பாவனையை விட்டு விட்டார்களோ, அவர்களுடைய கட்டுக்குள் மட்டும் தான் வருவார்; மற்றவர்களுடைய கட்டுக்குள் வர மாட்டார். த்வதீய என்பதன் அர்த்தம் ‘எனது’ ‘உனது’ என்கிற பாவனை. அதை விட்டாலொழிய அவர் கட்டுக்குள் வர மாட்டார்.

View More வெண்ணைப் பானை

[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

தம்மிடம் பயிற்சி பெற்ற கண்மணிகள் உலகுக்கு என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்டு மகிழ்வது சுவாமிக்கு பிடிக்கும். இதனால் சமூக சேவை செய்யாதவர்கள் கூட செய்ய ஆரம்பித்தனர். ஏதோ கூடினோம்; கும்மாளம் போட்டோம்;கலைந்தோம் என்று இல்லாமல் சேவை புரியும் பயிற்சி பெற்ற பட்டாளம் இந்த முன்னாள் மாணவர் சங்க பட்டாளம் ஆகும். வெளி உலகிலேயே உள்ள முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் திருப்பராய்த்துறை குருகுல பயிற்சி பெற்ற பழைய மாணவர் சங்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான்…

View More [பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை, இரண்டு கை போதாது அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பானாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று இன்புறுவர் என்று மங்கல வாழ்த்துரை செய்து திருப்பாவையை முடிக்கிறாள் ஆண்டாள்.

View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2

அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்

..கருவறையின் உட்புறம் ஒரு கோள வடிவாகவும், வெளிப்புறத் தளத்தை விட கொஞ்சம் பள்ளமாகவும் இருக்கும். லிங்கத்தின் மீது அபிஷேக பாத்திரத்தின் மூலம் நீர் சொட்டிக்கொண்டே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. நம்மூர் கோயில்கள் போலன்றி ‘காட்சிக்கு எளியவனாய்’ கருவறையில் சுவாமியைத் தொட்டுத் தரிசித்து வேண்டி வரலாம். ..

View More அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்