ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….

View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.

View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

பகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன?…. பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய மக்களின் காட்சிகளை காணலாம். கழை கூத்தாடிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ மகளிர், உழவர், மாடு மேய்ப்போர், வேடர் – என….

View More என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….

View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி

குருநாதரின் விருப்பப்படி அவர் ஜீவசமாதி அடைவதற்கான இடத்தைத் தயார் செய்தார்கள். ஜீவசமாதி அடைவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு…. குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்…. அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார்….

View More சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி
Aiyarappar Temple

திருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை. அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை “அதிகாரிச்சி” எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை “நிர்மால்ய நீர் போக்குவான்” என அழைத்தனர்…..

View More திருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

ராமர் விளையாடிய இடங்களில் நான் நடக்கிறேன் என்ற எண்ணம் அளிக்கும் உச்சபட்ச சிலிர்ப்பில், என் பாதங்களால் வணங்கியபடியே நடை பயில்கிறேன். சுற்றிலும் வெறும் துணி கட்டப்பட்ட நிலையில், எந்தப் பாதுகாப்பும் இன்றி ராமர் இருக்கிறார்…. ”ராம் லாலாவிற்கு கோயில் எழுப்பும் வரை காலில் செருப்பு அணிவதில்லை என்று சங்கல்பம் செய்து, அப்படியே தொடர்கிறோம், நூறாண்டுகளுக்கு மேலாக” என்கிறார்… 1990 கரசேவையின் போது துப்பாக்கிச் சூடு. செத்த உடல்களைக் கொண்டு இந்தப் படுகொலை பற்றி உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்ற கயமை நோக்கத்தோடு, சடலங்களை சாக்குகளில் கட்டி அப்படியே சரயூ நதியில் தூக்கி வீசி விட்டார்கள். அயோத்தி எங்கும் ரத்த ஆறு; சரயூ நதி அன்று செந்நிறமாக ஓடியது….

View More அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

ஒரு காசிப் பயணம்

இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம்…. கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை….இது கோயிலாக, கர்ப்பக் கிரஹமாக இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது…..

View More ஒரு காசிப் பயணம்

காலந்தோறும் நரசிங்கம்

பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.

View More காலந்தோறும் நரசிங்கம்