தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை
மத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன? தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது… ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை… நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும் மறைமுகமாக இயற்கை வேளாண்மைக்கு உதவுவதன் மூலம் நோய்கள் தவிர்ப்பு, மருத்துவ செலவினங்கள் தவிர்ப்பு, தேவையற்ற உர இறக்குமதிகள் தவிர்ப்பு, மனிதவளம் சேமிப்பு, சீமை மாடுகளுக்கு செலவாகும் மும்மடங்கு தீவன-நீர் சேமிப்பு, நோய் தாக்கு குறைவு என்று கணக்கிலடங்கா பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாட்டுப்பசுக்களை வாழ்வின், இயற்கையின் அங்கமாக பார்க்கும் பார்வை அரசுத்துறையினருக்கு வர வேண்டும்….
View More நாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வைஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு
உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை…
View More உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடுஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்
நந்திதேவருக்கும், ப்ருங்கி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் கொம்புகளும் கால்களும் உண்டு… ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே…? கொம்புகள் எங்கே..? ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம். பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்.. அதன் படியே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்…
View More ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி
பாரத அன்னையின் பாதங்களில் 8-8-1993 அன்று தம் இன்னுயிர்களை பலிதானமாக்கிய எம் இந்துத்துவ…
View More சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலிஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2
பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. … இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை? என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா? இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.
View More ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்
நேர்வழியோ நேர்மையற்ற வழியோ எவ்வழியில் பொருள் ஈட்டப்பட்டாலும் தமது பொருள் விரயமாவதை அல்லது தொலைந்து போவதையோ ஒருவரும் விரும்புவதில்லை. கருப்புப்பணமும் லஞ்சப்பணமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அரசின் சட்டத்திட்டங்க மூலம் அவற்றை பறிக்க முயன்றால் பதுக்கல்காரர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் தப்பித்துவிடுவார்கள். அரசின் பணமும் விரயமாகும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதன் அறிவுறுத்தலின் பேரில் SIT அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை அதிகாரபூர்வமாக கலைத்துவிட வேண்டும்.
View More பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக்…
View More காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணிவன்முறையே வரலாறாய்…- 28
அதனையும் விட இந்திய அரசியல்வாதிகள் இத்தகைய கொடூரங்களை இந்தியர்களிடமிருந்து மறைத்ததுடன், ஜவஹர்லால் சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.
View More வன்முறையே வரலாறாய்…- 28மாற்றுப் பாலின ஆன்மிகம் -1
ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.
View More மாற்றுப் பாலின ஆன்மிகம் -1