நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து

இஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம் எதிர்த்தோம். இன்று நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது இது எல்லாம் நடக்கும்தான்.

View More நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல.

View More “சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

உள்ளத்தே உள்ளதே உண்மை

என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை… அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம்.

View More உள்ளத்தே உள்ளதே உண்மை

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

“நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது…”

View More “சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4

பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…

View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4

நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. “கோயில்களை மூடுங்கள்” என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்…

View More நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்

இப்படித்தான் ஆரம்பம் -2

‘இனிமே வாட்சை அடகு வச்சா மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.

View More இப்படித்தான் ஆரம்பம் -2

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!

View More காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

புனிதமான போர்க்களம்

“ கீதை எப்போது சொல்லப்பட்டது என்பது நமக்கு முக்கியமில்லை. அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்,” என்ற விவேகானந்தரின் அற்புதமான வாசகம் நினைவிற்கு வந்தது.

View More புனிதமான போர்க்களம்