தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
View More யார் நப்பின்னை ?பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா
.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது… புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன…
View More பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழாவிஜயகாந்த் சொன்னது சரிதானா?
‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?
View More விஜயகாந்த் சொன்னது சரிதானா?வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்
கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்
View More வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்
பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜதந்திரமோ?
View More நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1
பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன …“ஒளி” “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள், தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல, தேவனின் ஆணைக்கும், அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும் (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”) குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது..
View More இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1காசியில் ஒரு நாள்
பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள். சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது… ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.
View More காசியில் ஒரு நாள்Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)
மது கைடபர்கள் வந்து தொல்லை கொடுக்கும் போதும் அறிதுயில் உணர ஹிந்து கற்றுக் கொண்டிருக்கின்றான். அவன் மீது வெறுப்பும், பகையும், அலட்சியமும், அழிநோக்கமுமாக, மாற்றார் பண்பாட்டுக் கடலைச் சிலுப்புவதில் எழுந்த விஷ்த்தையும் கழுத்தில் நிறுத்திக் கவனமும் நிதானமும் பேண ஹிந்து ஒருவனே கற்றிருக்கின்றான்… ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)போகப் போகத் தெரியும் – 41
வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது… சித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
View More போகப் போகத் தெரியும் – 41சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்
சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்