வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”

View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]

வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…

View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் – இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?… தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு வாய்க்குமென்றால் தமிழகச் சூழலில் தலித் நலனுக்கு பேருதவியாக அது இருக்கும்….

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே… நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாகவேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம்…

View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

ஆதிசங்கரர் படக்கதை — 9

“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”

View More ஆதிசங்கரர் படக்கதை — 9

விழா அறை காதை (மணிமேகலை – 2)

முன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம். அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில், கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் பழமைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும்.

View More விழா அறை காதை (மணிமேகலை – 2)

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…

View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]

பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..

View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?… காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்… ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது….

View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]