எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே. அதைவிட்டு நீங்கு. அது நீ வாழத் தகுதியற்றது.
View More சாணக்கிய நீதி -1குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்
வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம்.. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம்…
View More குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை
ஒரு சராசரி திரைப்பட ரசிகரை மட்டுமல்லாது, இஸ்ரோவையும், விண்வெளித்துறையையும் பற்றிய பல செய்திகளை அறிந்து, நம்பி நாராயணன் எழுதிய Ready to Fire புத்தகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களையும் கூட “வாவ்” சொல்ல வைத்திருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய வெற்றி. முயன்றால் இந்திய சினிமா தனது கைக்கு அடக்கமான பட்ஜெட்டிலும் எத்தகைய வீச்சை, உயரத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது. ‘ராக்கெட்ரி’ ஒவ்வொரு இந்திய இளைஞரும் பார்த்து உள்வாங்க வேண்டிய ஒரு திரைப்படம்…
View More ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வைதுரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடி
மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிரடி அரசியல் நிகழ்வுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உள்கட்சியில் ஏற்பட்ட கலகத்தால் பதவி விலக, சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆகியிருக்கிறார் (ஜூன் 30). முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
View More துரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடிதண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்
பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…
View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்வெள்ளிக்கிழமை விபரீதங்கள்
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – அவர்கள் சன்னிகளோ, ஷியாக்களோ, அகமதியாக்களோ, தங்கள் எதிரிகளை இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் உருவகித்து அவர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தி முடிந்த பிறகு – ‘தாருல் ஹரப்’ நாடாக இருந்த முந்தைய நாட்டை ‘தாருல் இஸ்லாம்’ நாடாக தங்கள் நாட்டை மாற்றிய பிறகு – தங்களுக்குள் அடித்துக் கொள்(ல்)வார்கள். அகமதியாவை சன்னியும் ஷியாவும் சேர்ந்து விலக்குவார்கள்; வேட்டையாடுவார்கள். ஷியா மசூதியில் சன்னிகள் குண்டு வைப்பார்கள். இவை ஏற்கனவே, மத அடிப்படையில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடான பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பவை. வெள்ளிக்கிழமை மகிமை புரிகிறதா?
View More வெள்ளிக்கிழமை விபரீதங்கள்விக்ரம் 2022 – திரைப்பார்வை
நடிகர் குழு: கமல்ஹாசன், பாஹத் ஃபாஸில், விஜய் சேதுபதி, சூர்யா இசை: அனிருத்…
View More விக்ரம் 2022 – திரைப்பார்வைம(மா)ரியம்மா – 14
நீங்கள்தானே மதம் மாறியாகவேண்டும் என்று சொன்னீர்கள். அது நான் மனு ஸ்ம்ருதியின் பிடியில்…
View More ம(மா)ரியம்மா – 14ம(மா)ரியம்மா – 13
ஓரமாக அமர்ந்திருக்கும் உதவி பாஸ்டர் சலிப்புடன் கேட்கிறார்: என்ன அச்சோ… இவனும் பேசிக்கிட்டே…
View More ம(மா)ரியம்மா – 13எங்கே போகிறேன்?
“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பில் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்திருக்கிறாராம்!”
“சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ! நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்! கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!”