நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை… பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது வாழ்கிறது…
View More எழுமின் விழிமின் – 3Tag: அமைதி
அறியும் அறிவே அறிவு – 10
அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 |…
View More அறியும் அறிவே அறிவு – 10ஒரு தேசம், இரு உரைகள்
அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்… ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக…’
View More ஒரு தேசம், இரு உரைகள்பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2
இந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2
மந்திரங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதன் பயன் என்று ஒன்று உண்டு. நம்முடைய சூக்ஷ்ம உடலில் சில குறிப்பிட்ட அதிர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் வேலை செய்கின்றன. … தினமும் இரவு தூங்கப் போகும் முன், ஒரு அரை மணி நேரம், அன்றைய மனோ நிலைக்கு உகந்த ஆன்மிக நூல் ஒன்றை படிப்பது அல்லது சொற்பொழிவு பதிவைக் கேட்பது என்னும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்…
View More யோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2அருணையின் கருணை
ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைதியானமே நம்மை உய்விக்கும்
தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.
வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.
View More தியானமே நம்மை உய்விக்கும்ஓம் சாந்தி!
அனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும். ஓம்…
View More ஓம் சாந்தி!