“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…
View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…Tag: அறநெறி
வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்
இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது… சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது… அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது?…. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது…
View More வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்இராமாயண அறம் – ஜடாயுவின் உரை
தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..
View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரைஇராமாயணத்தின் மூன்று தளங்கள்
ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு… இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம்… உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம்…
View More இராமாயணத்தின் மூன்று தளங்கள்முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி
முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.
View More முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டிவழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்
சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின்
பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.