2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை! சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை!

View More ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

“பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்.”

View More புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

சீன டிராகனின் நீளும் கரங்கள்

இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார்… சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்… சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்… இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “சீனாவின் முத்துமாலைத் திட்டம்” என்று அழைக்கின்றனர்… சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை…

View More சீன டிராகனின் நீளும் கரங்கள்

உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த “உடையும் இந்தியா?” நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக… ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, “திராவிட கிறிஸ்தவம்” என்ற புரளி…தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்….

View More உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும், இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்…. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும்…. “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள்… உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான்…

View More ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்… கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில் தேச நலனை முன்வைத்து பா.ஜ.க எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று….

View More இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்

“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்… மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்… இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே…

View More இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்

சர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன?: ஒரு நேர்காணல்

பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் குறைந்த அளவே ஊதியம் பெறுவதால், தவறான செய்கைகளுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் எளிதில் இரையாகின்றனர்… பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கு, திருச்சபை, பணத்தின் பின்னும் அதிகாரத்தின் பின்னும் செல்வது தெரியும்… அரசு, அதன் நிர்வாகத்தை எடுத்து, ஒழுங்கான சட்டதிட்டங்களுக்குட்படுத்தி நடத்தவேண்டும்… கிறிஸ்தவம், இந்தியாவில், தனது சொந்த அடையாளத்தை இழந்து நிற்கிறது… அப்புறம் ஒருவரும் மதம் மாற மாட்டார்கள்– எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும்.

View More சர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன?: ஒரு நேர்காணல்