காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..
View More கம்பர் உருவப்படங்கள்Tag: ஓவியம்
சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…
அம்புலிமாமாவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக எளிதாக ‘அம்புலிமாமா’ கதை என இப்போது சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் ’அம்புலிமாமா’ என்பது அப்படி வளர்ந்தவர்களின் சின்னத்தனத்துடன் ஒப்பிடக் கூடிய சமாச்சாரமே அல்ல. கிழக்கு கடற்கரையில் பிரதீபத்தை தலை நகராக கொண்டு ஆண்ட சந்திரத்வஜனை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? … காந்தி-நேரு அதிகார அமைப்பால் பாரதத்தின் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட தேசபக்தர்களை -பாகா ஜதீன் முதல் படேல் வரை- சித்திர கதை வடிவாக சிறுவர்களுக்கு அளித்தது அம்புலிமாமா. அது மட்டுமல்ல….
View More சிறுபிள்ளைகள் சமாச்சாரம்…காலந்தோறும் நரசிங்கம்
பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.
View More காலந்தோறும் நரசிங்கம்நமக்கு எதற்கு வெ.சா.?
[…]வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும்.[…]
View More நமக்கு எதற்கு வெ.சா.?சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3
ஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்… இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா?..
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை
ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? … இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.
View More இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை