அழைத்து அருள் தரும் தேவி

சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…

View More அழைத்து அருள் தரும் தேவி

’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்… இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள்.

View More ’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)

View More கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

View More அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

[மூலம்: தருண் விஜய்] காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் – அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் – அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று… ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி விடுகிறது – எதிர்ப்பு ஊர்வலம் இல்லாத நேரங்களில் மட்டும்!

View More காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

“அமர்நாத் கோயில் நில விவகாரம்” என்பது ஏதோ அயோத்யா பிரச்சனை போல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்காக இரு வேறு குழுவினர் சண்டை போட்டுக் கொள்வது போல ஒரு மேலோட்டமான உருவம் நிலவுகிறது. இது வெறும் அமர்நாத் நிலம் பற்றிய பிரச்சனை தானா ? ஒரு நூறு ஏக்கர் நிலத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? முதலில் இந்த அமர்நாத் பிரச்சனை எப்படி ஆரம்பித்தது ? அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், பத்திரிகைகளும், காஷ்மீரிகள் என்று சொல்லை காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லீம்களை மட்டுமே குறிக்கும்படி பயன்படுத்துகிறார்கள். உண்மையில் காஷ்மீரிகள் யார்? பண்டிட்கள் என்பவர்கள் யார்? இன்னும் பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடையாக அமைகிறது.

View More ஜம்முவின் ஹிந்து எழுச்சி – சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.

View More காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்