துர்க்கா ஸுக்தம் – தமிழில்

யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது… ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு சோமத்தைப் பிழிந்து அளிப்போம். அறிவுருவான அவன் எமது பகைகளைப் பொசுக்கிடுக. எமது ஆபத்துக்கள் அனைத்தையும் போக்கிடுக கடலைக் கடக்கும் கப்பலென அக்கரை சேர்த்திடுக…

View More துர்க்கா ஸுக்தம் – தமிழில்

சக்திதான் என்றும் !

தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…

View More சக்திதான் என்றும் !

ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற கட்டுரையை தினமணியில் பால.கௌதமன் எழுதினார்.. அதற்கு வந்தது திராவிட இயக்க எதிர்வினை.. ஆயுதங்களில் தேவதை குடியிருப்பதாகக் கருதுவது தமிழர் மரபு. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில், ’வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்’ என்ற குறிப்பு… மகாநவமி, விஜயதசமி விழா 5-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது…

View More ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

அழைத்து அருள் தரும் தேவி

சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…

View More அழைத்து அருள் தரும் தேவி

தேவி சூக்தம்

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே… மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை … கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

View More தேவி சூக்தம்

நவராத்திரி பற்றி பாரதியார்

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

View More நவராத்திரி பற்றி பாரதியார்