”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…
View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1Tag: நாத்திகம்
ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்
கருணாநிதி கையால் தாலி எடுத்துக் கொடுப்பது, எதிர்கட்சியின் மீது பெய்யப் படும் வசைகளே மந்திரங்களாக வைத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டப் படுவது போன்ற அவலம் எதுவும் நடக்காமல், தன் மனதுக்கு பிடித்தபடி, தன் குடும்பத்தினர் விரும்புகிற படி இந்த திருமணத்தை நடத்தியிருக்கிற ரஜினியின் நேர்மை மெச்சத் தகுந்தது…. விடுதலை பத்திரிகை பகுமானமாக வீரமணி ரஜினி குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ மட்டும் இன்று வெளியிட்டிருக்கிறது…
View More ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
[இந்து மதத்தை] இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். […….]மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.
View More ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; … ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்…
View More ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்