இந்திய நடனம், அதன் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை, அதன் எல்லா வகை வடிவங்களிலும் எதையெல்லாம் தன் சிறப்பாகக் கருதுகிறதோ அவை அத்தனையையும் மறுப்பவர் சந்திரலேகா. இந்திய நடனம் கொண்டுள்ள மத ரீதியான உறவுகள், அதன் முக்கிய சிறப்பான அங்கங்கள் என்று கருதுபவை, எந்த உன்னதத்தை நோக்கி அது பயணப்படுவதாகச் சொல்கிறதோ அது, எல்லாவற்றையுமே உதறியவர் அவர்….. பைபிள் கதைகளை பரத நாட்டியத்தில் சொல்ல முயன்ற பாதிரியார் ஃப்ரான்ஸிஸ் பார்போஸா (Fr.Francis Barboza)-வைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. இந்த அளவு துணிச்சலோ, முனைப்போ நம் வீட்டு முற்றத்தில் கூட நம்மால் காண முடியவில்லையே…
View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 5 [நிறைவுப் பகுதி]Tag: பக்தி
கடவுளின் பணித்திட்டம்
உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.
View More கடவுளின் பணித்திட்டம்இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4
என்னை அழைத்துக்கொண்டு போன அதிகாரிக்குப் பயம்வர ஆரம்பித்து தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயற்சித்தார். நானோ எந்தக் கவலையும் இல்லாமல் எனக்குத் தெரிந்தவரை எல்லாம் சொல்லிவிட்டு அப்புறமாகத்தான் எனது அதிகாரியுடன் வெளியே வந்தேன். இன்றைக்கும் எனது அதிகாரியின் நடுக்கம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நானோ அங்கு கல் போல, மலை போல உட்கார்ந்து அளவாகப் பேசியதும் நினைவு இருக்கிறது. அன்று அக்ஷர மண மாலையில் எவ்வளவு மனனம் செய்தேன் என்பது அப்புறம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வரிகள்…
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3
முதல் நாள் நினைத்துக் கொண்டு, அன்று காலைதான் ரயில் டிக்கெட்டே வாங்கினோம் என்று அவர் அறிந்ததும், ஆச்சரியத்துடன் “உங்கள் தரிசனத்திற்கு ஏதாவது miracle (அதிசயம்) நடந்தால்தான் உண்டு” என்றார். நான் நொடிப்பொழுதும் யோசியாது “miracle நடந்தால் நடக்கட்டுமே” என்றேன்.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3பணிப்பொன்
ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
View More பணிப்பொன்வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்
வைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது… “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்…
View More வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1
இது போன்ற சில அனுபவங்கள் வரும்போதும் நாம் பெறுவது இறை அனுபவம்தான். இவை எவையுமே ஒருவரை முன் நிறுத்தி வருவதில்லை. ஆதலால் இவை எவருக்கு வருகிறது என்பதும் முக்கியமில்லை. இப்படியாக நடப்பதிலிருந்து நாம் அனைவரும் நமது குறுகிய எண்ணங்களையும், மனப் பான்மையையும் விட்டுவிட்டு இறைவன் நம்மைத் தேடி வரும் நிலையை நாம் அடையும்படி நாம் வளர வேண்டும் என்பதே முக்கியம்.
View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1பண்டைக்குலமும் தொண்டக்குலமும்
நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்… சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்… யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்!
View More பண்டைக்குலமும் தொண்டக்குலமும்நம்மைத் தேடி வரும் இறைவன்
நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்….
கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
View More நம்மைத் தேடி வரும் இறைவன்பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4
பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள்…
View More பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4