வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது, கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றைப் பெண்மணியாக ஔவையை உருவகித்தது. ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype. அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும்…
View More தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்Tag: இந்துப் பெண்கள்
அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். வள்ளுவர் நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை…
View More அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்புதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்
ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார்…
View More திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்வேதங்களில் விதவை மறுமணம்
உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள்…
View More வேதங்களில் விதவை மறுமணம்“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்
இந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.. மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது… ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல…
View More “சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்இந்துமதத்தில் பெண்கள்: உரை
இந்துமத வரலாற்றில் பெண்களின் இடம் என்ன, வேதகால பெண் ரிஷிகள், சீதை பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமா, தாய் மனைவி முதலிய குடும்ப உறவுகளைத் தாண்டி பெண்ணின் சுயம் பற்றி இந்து தத்துவம் என்ன கூறுகிறது, இன்றைய இந்து சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகிய விஷயங்களை ஒரு பறவைப் பார்வையாக இந்த 30 நிமிட உரை தொட்டுச் செல்கிறது. இங்கே கேட்கலாம்..
View More இந்துமதத்தில் பெண்கள்: உரை‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”
தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம். தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. அந்தப் பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்? உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது…. தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்…
View More ‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)
ராமருடன் தான் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த அன்பில் எந்த மாசு, மருவும் இல்லை என்பதே உண்மை என்பதால் தன்னை ஈன்ற பூமாதேவியே தன்னை அவள் கரங்களில் தாங்கிக் கொள்ளட்டும் என்று சீதை பிரார்த்தனை செய்கிறாள். மூன்று வரிகளில் உள்ள அந்த சீதையின் வேண்டுதல், ராமாயணத்திலேயே எவருடைய மனதையும் உருக்கி மிகுந்த இரக்கம் கொள்ள வைக்கக்கூடிய வரிகள்… உண்மையில் எல்லாவிதமான ரசங்களும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்றாலும், மற்றவைகளை விட சோக ரசம் முதன்மையாக இருக்கிறது. ராமாயணத்தை ஓர் இலக்கியக் கலைப் படைப்பாக மட்டுமே காண்பது சரியான பார்வையாக இருக்க முடியாது. அதை மோக்ஷத்தைத் தர உதவும் ஆன்மிகத்தைப் போதிக்கும் சமய நூலாகவே பார்க்கவேண்டும். அதில் பரவலாகக் காணப்படும் சோகத்திற்கு ஓர் ஆன்மிக முக்கியத்துவம் இருக்கிறது….
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)வன்முறையே வரலாறாய்…- 30
முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….
View More வன்முறையே வரலாறாய்…- 30மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)
தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள்…
View More மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)