ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார்…
View More திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்Tag: கற்பு
ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1
க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும். பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்… இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர் என்கிறான் அனுமன். குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள்…
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3
இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….
View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2
உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்….. “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்…..
View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை
சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது…. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்….கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்….
View More சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வைவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்
இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது… சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது… அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது?…. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது…
View More வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3
மக்களைக் காக்கும் பணியில், சாதாரணமாகக் கருதப்படும் தவிர்க்கப்பட வேண்டிய செயல், அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல் என்றாலும் அரசு அதைச் செய்யவேண்டும்.. மன்னித்தல் என்பது எவருக்குமே கடினமான ஒரு காரியம்; கடவுளுக்குக் கூட… கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள். இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன… பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)
உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்
ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்…
View More கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?
என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் …ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
View More ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?